Published:Updated:

`அங்கிளை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ’ - தாயின் துணையுடன் திருமணம் தாண்டிய உறவால் சிறார்வதைக்கு ஆளான மாணவி

கைதுசெய்யப்பட்ட ராஜையன்

`` `இது பற்றி வெளியே சொல்லாதே’ என்று கூறியுள்ளார் தாய் சுனிதா. தாயின் ஆதரவோடு கடந்த மூன்று மாதங்களாக 11-ம் வகுப்பு மாணவியை சிறார்வதை செய்துள்ளார் ராஜையன்.” - போலீஸ்

`அங்கிளை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ’ - தாயின் துணையுடன் திருமணம் தாண்டிய உறவால் சிறார்வதைக்கு ஆளான மாணவி

`` `இது பற்றி வெளியே சொல்லாதே’ என்று கூறியுள்ளார் தாய் சுனிதா. தாயின் ஆதரவோடு கடந்த மூன்று மாதங்களாக 11-ம் வகுப்பு மாணவியை சிறார்வதை செய்துள்ளார் ராஜையன்.” - போலீஸ்

Published:Updated:
கைதுசெய்யப்பட்ட ராஜையன்

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தன் மனைவி சுனிதா, 11-ம் வகுப்பு படிக்கும் 16-வயதான மகளுடன் வசித்துவருகிறார். கூலித் தொழிலாளியான ராமசாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு முதுகுத்தண்டுவட பிரச்னையால் படுத்த படுக்கையாகி, வீட்டிலேயே முடங்கியிருக்கிறார். இதனால் குடும்பம் வறுமையால் வாடியது. குடும்பச்சுமையைக் குறைக்க, ராமசாமியின் மனைவி சுனிதா (37) புதுக்கடைப் பகுதியில் ராஜையன் (48) என்பவர் நடத்திவரும் ஃபர்னிச்சர் கடைக்கு வேலைக்குச் சென்றுள்ளார். நாளடைவில் ராஜையனுக்கும் சுனிதாவுக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் சுனிதவின் வீட்டுக்குச் சென்று அவருடன் தனிமையில் இருப்பது வழக்கமாம்.

சிறார்வதை
சிறார்வதை

இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சுனிதாவின் 16-வயது மகள், மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தன்னை ஒருவர் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து சிறார்வதை செய்துவருவதாகவும், `நான் தோழியின் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளேன், உடனே என்னைக் காப்பாற்றுங்கள்’ எனவும் கூறி அழுதுள்ளார். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பியூலா பெல்ஜெனிதா தலைமையில் அதிகாரிகள் அந்தச் சிறுமியை அவரின் தோழியின் வீட்டிலிருந்து மீட்டனர். பின்னர் இது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி சிறுமியின் தாய் சுனிதா, அவரின் ஆண் நண்பர் ராஜையன் ஆகியோரைக் கைதுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து போலீஸார் கூறுகையில், "வாரம் தவறாமல் சுனிதாவின் வீட்டுக்குச் செல்லும் ராஜையன் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதியும் அங்கு சென்றுள்ளார். வீட்டில் தாய் இல்லாததால் சிறுமியை அறைக்குள் அழைத்துச் சென்று ராஜையன் சிறார்வதை செய்யுள்ளார். இது பற்றி சிறுமி தாயிடம் கூறியபோது, `அங்கிளுக்கு உன்மேல் ஆசை... அட்ஜஸ்ட் பண்ணிக்கோ' என்று கூறியிருக்கிறார். மேலும், `இது பற்றி வெளியே சொல்லாதே’ என்றும் கூறியுள்ளார் தாய் சுனிதா. தாய் சுனிதாவின் ஆதரவோடு கடந்த மூன்று மாதங்களாக 11-ம் வகுப்பு மாணவியைச் சிறார்வதை செய்துள்ளார். ஒருகட்டத்தில் தாய் மற்றும் தாயின் ஆண் நண்பரின் கொடுமை தாங்க முடியாமல் தனது தோழியிடம் நடந்த சம்பவங்களைக் கூறியுள்ளார்.

சிறார்வதை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ராஜையன்
சிறார்வதை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ராஜையன்

பின்னர் தோழியின் அறிவுறுத்தல் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தாய், ராஜையன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்றனர். பெற்ற மகளையே சிறார்வதைக்கு உட்படுத்திய தாயின் கொடூரச் செயல் குமரி மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism