Published:Updated:

விருதுநகர்: உடலுறவில் கணவரின் விபரீத ஆசை; பெண்ணுறுப்பில் டார்ச்லைட் திணித்து மனைவி கொலை!

வனராஜ்

பிள்ளைகள் தூங்கிய பின்னர், மோட்டார் அறையின் மாடியில் வனராஜ், அவரின் மனைவி ஏசுராணி இருவரும் தங்கியதாகத் தெரிகிறது. தொடர்ந்து, காலையில் எழுந்து பார்த்தபோது ஏசுராணி உடலில் ரத்தக்காயங்களுடன் இறந்துகிடந்திருக்கிறார்.

விருதுநகர்: உடலுறவில் கணவரின் விபரீத ஆசை; பெண்ணுறுப்பில் டார்ச்லைட் திணித்து மனைவி கொலை!

பிள்ளைகள் தூங்கிய பின்னர், மோட்டார் அறையின் மாடியில் வனராஜ், அவரின் மனைவி ஏசுராணி இருவரும் தங்கியதாகத் தெரிகிறது. தொடர்ந்து, காலையில் எழுந்து பார்த்தபோது ஏசுராணி உடலில் ரத்தக்காயங்களுடன் இறந்துகிடந்திருக்கிறார்.

Published:Updated:
வனராஜ்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரமான அத்திக்கோயில் மலைவாழ்மக்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர் வனம் (எ) வனராஜ் (50). மலையடிவார தோட்டமொன்றில் காவலாளியாகப் பணி செய்துவருகிறார். இவர் ஏற்கெனவே இரண்டுமுறை திருமணமானவர். இந்த நிலையில், கணவரைப் பிரிந்து தனியே இரண்டு மகள்களுடன் வாழ்ந்துவந்த ஏசுராணி (எ) உமா (28) என்பவரை மூன்றாவதாக வனராஜ் திருமணம் செய்துகொண்டு கான்சாபுரம் பகுதியில் வாழ்ந்துவந்தார்.

கொலை
கொலை
மாதிரிப் படம்

வனராஜ், ஏசுராணி, ஏசுராணியின் முதல் கணவருக்குப் பிறந்த இரண்டு பெண் பிள்ளைகள் என நான்கு பேரும் ஒரே குடும்பமாக கான்சாபுரம் அத்திக்கோவில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள சங்கர்ராஜா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து காவல் வேலை செய்துவந்தனர். இந்த நிலையில், இரவில் பிள்ளைகள் இருவரும் தூங்கிய பின்னர், தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சும் மோட்டார் அறையின் மாடியில் வனராஜ் மற்றும் அவரின் மனைவி ஏசுராணி இருவரும் தங்கியதாகத் தெரிகிறது. தொடர்ந்து, காலையில் எழுந்து பார்த்தபோது ஏசுராணி உடலில் ரத்தக்காயங்களுடன் இறந்துகிடந்திருக்கிறார்.

இதனால் அச்சமடைந்த வனராஜ், பகலில் வெகுநேரம் கழித்தே ஏசுராணி இறந்தது குறித்து கூமாபட்டி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ஏசுராணியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே, அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் சம்பவ இடத்தில் ஏசுராணி இறந்துகிடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது வனராஜிடம் போலீஸார் விசாரணை நடத்துகையில் திடுக்கிடும் தகவல்களைக் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக போலீஸார் தெரிவிக்கையில், "வனராஜும், ஏசுராணியும் இரவு மோட்டர் அறையில் தங்கியிருந்த இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியிருக்கின்றனர். பின்னர், போதையில் இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது தன்னால் இதற்குமேல் உடலுறவுகொள்ள முடியாது என ஏசுராணி மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஆனாலும், வனராஜ், தனது கையிலிருந்த டார்ச்லைட்டை, மனைவியின் உறுப்பில் வைத்து அழுத்தியிருக்கிறார். இதனால் அலறித்துடித்த ஏசுராணி அதிக ரத்தம் வெளியேறி இறந்ததாக வனராஜ் வாக்குமூலம் அளித்திருக்கிறார்" என்றனர். இதையடுத்து, கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், வனராஜைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.