Published:Updated:

நடத்தை குறித்து அவதூறுப் பேச்சு; மன உளைச்சலில் பெண் தற்கொலை - எதிர்வீட்டில் வசிக்கும் தம்பதி கைது!

பெண் தற்கொலை
News
பெண் தற்கொலை

ரேவதிக்கும் மகேந்திரனுக்கும் இடையே திருமணம் தாண்டிய உறவு இருப்பதாக மகேந்திரனின் மனைவி வீரச்செல்வி அக்கம் பக்கத்தினரிடம் கூறி அவதூறு செய்துவந்ததாகச் சொல்லப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகிலிருக்கும் காளவாய்க்கரை பகுதியில் வசித்துவந்தவர் ரேவதி. இவருக்கு இரு மகன்கள். கடந்த 11 ஆண்டுகளாகத் தன் கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த ரேவதி, காளவாய்க்கரை பகுதியிலிருக்கும் தன் தாய் வீட்டில், மகன்களுடன் வசித்துவந்தார். இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, ரேவதி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்கொலை
தற்கொலை

இது தொடர்பாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் ரேவதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ரேவதி எழுதிய கடிதம் ஒன்று அவர்களிடம் சிக்கியது. அந்தக் கடிதத்தில், ரேவதி தன் மரணத்துக்கு எதிர்வீட்டில் வசிக்கும் மகேந்திரன், அவர் மனைவி வீரச்செல்வி இருவரும்தான் காரணம் எனக் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது தொடர்பாக, ரேவதியின் குடும்பத்தினரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மகேந்திரன், அவர் மனைவி வீரச்செல்வி ஆகியோரைக் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய காவல்துறையினர், ``ரேவதியின் எதிர்வீட்டில் வசிக்கும் மகேந்திரனுக்கு 50 வயதாகிறது. ரேவதிக்கும் மகேந்திரனுக்கும் இடையே திருமணம் தாண்டிய உறவு இருப்பதாக மகேந்திரனின் மனைவி வீரச்செல்வி அக்கம் பக்கத்தினரிடம் கூறி அவதூறு செய்துவந்ததாகச் சொல்லப்படுகிறது.

மன்னார்குடி
மன்னார்குடி

இதனால் மனவேதனை அடைந்த ரேவதி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ரேவதி எழுதிவைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டுதல் பிரிவின் கீழ், மகேந்திரன், அவர் மனைவி வீரச்செல்வி இருவர் மீதும் வழக்கு பதிந்து, இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.