Published:Updated:

திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலி; ஆத்திரத்தில் 49 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்த இளைஞர்!

கொலைசெய்த இளைஞர் கைது

திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியை 49 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்த ஒடிசா இளைஞனை போலீஸார் கைதுசெய்தனர்.

திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலி; ஆத்திரத்தில் 49 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்த இளைஞர்!

திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியை 49 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்த ஒடிசா இளைஞனை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கொலைசெய்த இளைஞர் கைது

ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலியை 49 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் கொலைசெய்யப்பட்ட பெண் குனிதர் சீமாதாஸ் என்றும், கொலைசெய்த நபர் ஜகன்னாத் கோதா என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

கொலை
கொலை

முன்னதாக குனிதர் சீமாதாஸ், ஜகன்னாத் கோதாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அடிக்கடி வற்புறுத்திவந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் ஜகன்னாத் கோதா இதில் பெரிதாக ஆர்வம் காட்டாததுபோல் தெரிகிறது. அதனால் குனிதர் சீமாதாஸை கொலைசெய்ய முடிவுசெய்த ஜகன்னாத் கோதா, வெளியூருக்கு எங்காவது சுற்றிப்பார்க்கச் செல்லலாம் என தன் காதலியை குஜராத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஜகன்னாத் கோ, குனிதர் சீமாதாஸை சூரத்தின் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று 49 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்துவிட்டு, உடலை அங்கேயே வீசிவிட்டு புவனேஸ்வருக்கு வீடு திரும்பிவிட்டார்.

காதலியை 49 முறை கத்தியால் குத்தி கொலைசெய்த காதலன் கைது
காதலியை 49 முறை கத்தியால் குத்தி கொலைசெய்த காதலன் கைது

பின்னர் இது தொடர்பாக தகவலறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டனர். அப்போது கொலைசெய்யபட்டவரின் ஆடையில் கிடைத்த முக்கிய தடயத்தை வைத்து பேருந்து நிலையம், ரயில் நிலையங்களின் சிசிடிவி கேமிராக்களை ஆய்வுசெய்து விசாரணை நடத்தினர். இறுதியில் ஜகன்னாத் கோதா புவனேஸ்வரில் இருப்பதைக் கண்டுபிடித்த போலீஸார், அங்கு சென்று அவரைக் கைதுசெய்தனர். அதையடுத்து தற்போது, இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பிருக்கிறதா என்பது குறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.