Published:Updated:

சென்னை: போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்ததால் ஆத்திரம்; மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது!

கொலை

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த ஆத்திரத்தில் மனைவியைக் கொலைசெய்த கணவரை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை: போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்ததால் ஆத்திரம்; மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது!

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த ஆத்திரத்தில் மனைவியைக் கொலைசெய்த கணவரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கொலை

சென்னை அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரின் மனைவி ரேவதி. இந்தத் தம்பதிக்கு திலீப்குமார் என்ற மகன் இருக்கிறார். வேலைக்கு எதுவும் செல்லாத வேலாயுதம் மது போதைக்கும் அடிமையாக இருந்தார். மேலும் அவரின் தொல்லைகளால் அக்கம் பக்கத்தில் அதிருப்தியடைந்தனர். அதனால் வேலாயுதத்தை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கும்படி ரேவதியிடம் அந்தப் பகுதியினர் தெரிவித்தனர். இதையடுத்து ரேவதியும், சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய கணவர் வேலாயுதத்தை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார்.

murder
murder

இதையடுத்து வேலாயுதம் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தச் சூழலில் சிகிச்சை முடிந்து கடந்த 10 நாள்களுக்கு முன்பு வேலாயுதம் வீட்டுக்குத் திரும்பினார். அதன் பிறகும் வேலாயுதம் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். அதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்றிரவும் ரேவதிக்கும் வேலாயுதத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வேலாயுதம், மனைவி ரேவதியின் முடியைப் பிடித்து இழுத்தார். பின்னர் அவரின் தலையை சுவற்றில் மோதினார். இதில் ரேவதி மயங்கினார். அதைப் பார்த்த திலீப்குமார் அதிர்ச்சியடைந்து ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ரேவதியைப் பரிசோதித்த பார்த்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.

அதனால் வேலாயுதம் வீட்டைவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். இந்தச் சம்பவம் குறித்து அம்பத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீஸார் வந்து, ரேவதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் கொலை வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். மனைவியைக் கொலைசெய்துவிட்டு போதையில் சுற்றித் திரிந்துக்கொண்டிருந்த வேலாயுதத்தை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.

கைது
கைது

போதை தெளிந்த பிறகு வேலாவயுதம், தன்னை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துவிட்ட ஆத்திரத்தில் மனைவியைக் கொலைசெய்ததாக போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.