Published:Updated:

குடும்பத் தகராறு... முற்றிய வாக்குவாதம்; மனைவியைக் கொலை செய்துவிட்டு போலீஸில் சரணடைந்த நபர்!

கொலை

குடும்பத் தகராறு காரணமாக, கணவனே மனைவியைக் கொலை செய்திருக்கும் சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (60). இவர் மனைவி புனிதா (52) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). ஏழுமலை, திண்டிவனத்திலுள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை செய்துவந்துள்ளார். கடந்த ஆறு மாத காலமாக ஏழுமலைக்கும், அவர் மனைவி புனிதாவுக்கும் இடையே குடும்பப் பிரச்னை இருந்துவந்திருக்கிறது.

கொலை செய்யப்பட்ட புனிதா
கொலை செய்யப்பட்ட புனிதா

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில், நேற்றிரவும் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், ஆத்திரமடைந்த ஏழுமலை, இன்று அதிகாலை 2:30 மணியளவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த புனிதாவை மரம் வெட்டும் கத்தியைக் கொண்டு வெட்டிக் கொலை செய்திருக்கிறார். கழுத்து, முகம் பகுதிகளில் வெட்டியதில், புனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதையடுத்து ஏழுமலை திண்டிவனம் காவல் நிலையத்தில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் சரணடைந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், புனிதாவின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அதைத் தொடர்ந்து, ஏழுமலையைக் கைதுசெய்த திண்டிவனம் போலீஸார், அவரை மயிலம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஒப்படைத்தனர்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

குடும்பத் தகராறு காரணமாக, கணவனே மனைவியைக் கொலை செய்திருக்கும் சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.