Published:Updated:

திருப்பூர்: துணை நடிகை கொலை; சினிமாவில் நடிப்பது பிடிக்காததால் கணவர் வெறிச்செயல்!

கொலை

மனைவி சினிமாவில் நடிப்பது பிடிக்காததால், அவரைக் கழுத்தை நெரித்துக் கொலைசெய்த கணவனை போலீஸார் கைதுசெய்தனர்.

திருப்பூர்: துணை நடிகை கொலை; சினிமாவில் நடிப்பது பிடிக்காததால் கணவர் வெறிச்செயல்!

மனைவி சினிமாவில் நடிப்பது பிடிக்காததால், அவரைக் கழுத்தை நெரித்துக் கொலைசெய்த கணவனை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கொலை

திருப்பூர், செல்லம் நகரைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவருகிறார். இவர் மனைவி சித்ரா (35). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள். சித்ரா, செல்லம் நகரிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். டிக்டாக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது, சித்ரா வீடியோ பதிவிட்டுவந்தார். இது பிடிக்காமல் அமிர்தலிங்கம் சித்ராவைக் கண்டித்துவந்திருக்கிறார்.

டிக்டாக் மூலம் அறிமுகமான நபருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்ரா சென்னைக்குச் சென்று, அங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்துவந்தார். இதற்கு அமிர்தலிங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்திருக்கிறார். ஆனால், சித்ரா சென்னையில் தங்கியிருந்து சினிமாவில் நடித்துவந்திருக்கிறார்.

பிரச்னை
பிரச்னை

இந்த நிலையில், மூத்த மகள் திருமணத்துக்காகக் கடந்த வாரம் சென்னையிலிருந்து சித்ரா திருப்பூருக்கு வந்திருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அமிர்தலிங்கத்துக்கும் சித்ராவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அமிர்தலிங்கத்திடம் கோபித்துக்கொண்டு புதிதாகத் திருமணமான மகள் வீட்டுக்கு சித்ரா சென்றிருக்கிறார்.

இதையடுத்து, உறவினர்கள் சித்ராவைச் சமாதானப்படுத்தி அமர்தலிங்கத்துடன் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும், அமிர்தலிங்கம் வீட்டுக் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, கழுத்தில் காயங்களுடன் சித்ரா உயிரிழந்து கிடந்தார்.

கொலை
கொலை

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அமிர்தலிங்கத்திடம் நடத்திய விசாரணையில் சித்ரா சினிமாவில் நடிப்பது பிடிக்காததால் ஏற்பட்ட தகராறில், துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலைசெய்தது தெரியவந்தது. இதையடுத்து அமிர்தலிங்கத்தை போலீஸார் கைதுசெய்தனர்.