Published:Updated:

சென்னை: வீடியோ காலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - போட்டோ ஸ்டுடியோ நடத்தியவர் கைது!

போக்சோ

வீடியோ கால் மூலம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போட்டோ ஸ்டுடியோ நடத்திவருபவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: வீடியோ காலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - போட்டோ ஸ்டுடியோ நடத்தியவர் கைது!

வீடியோ கால் மூலம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போட்டோ ஸ்டுடியோ நடத்திவருபவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
போக்சோ

சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசிக்கும் 14 வயது சிறுமி, தன்னுடைய தந்தை நடத்தி வரும் தள்ளுவண்டி டிபன் கடைக்கு செல்வது வழக்கம். அப்போது டிபன் கடையின் அருகில் போட்டோ ஸ்டுடியோ நடத்திவரும் கார்த்திகேயன் (39) என்பவர், சிறுமியுடன் பேசி பழகி வந்தார். பின்னர் செல்போனில் சிறுமியுடன் கார்த்திகேயன் பேசி வந்தார். அப்போது வீடியோ காலில் இருவரும் பேசி வந்திருக்கின்றனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்தரிப்புப் படம்

வீடியோ காலில் பேசும்போது சிறுமிக்கு கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால் சிறுமி பாதிக்கப்பட்டார். இதையடுத்து கார்த்திகேயனின் தொல்லை குறித்து சிறுமி அவரின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதற்கட்டமாக சிறுமியிடம் போலீஸார் விசாரித்தபோது கார்த்திகேயன் குறித்து அவர் தெரிவித்தார். அதன்பேரில் கார்த்திகேயனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியிடம் அடிக்கடி வீடியோ காலில் பேசி கார்த்திகேயன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது உண்மையென தெரியவந்தது.

கைது
கைது

இதையடுத்து கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திகேயன், கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர். விசாரணைக்குப்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கார்த்திகேயனை போலீஸார் சிறையில் அடைத்தனர்.