Published:Updated:

`நெருக்கமான கடைவீதிகள்தான் டார்கெட்!’ - புதுக்கோட்டையை அலறவிட்ட டூ வீலர் திருடன் சிக்கியது எப்படி?

புதுக்கோட்டையை அலறவிட்ட டூ வீலர் திருடன்!

கண்ணன் ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகள், நெருக்கமாக இருக்கும் கடைவீதிகளில் வாகனத் திருட்டில் ஈடுபட்டிருக்கிறார். திருடிய வாகனங்களைத் தனக்கு நெருக்கமான சில மெக்கானிக்குகள் மூலம், நம்பர் பிளேட்டை மாற்றி, குறைவான விலைக்கு விற்பனை செய்துவந்திருக்கிறார்.

`நெருக்கமான கடைவீதிகள்தான் டார்கெட்!’ - புதுக்கோட்டையை அலறவிட்ட டூ வீலர் திருடன் சிக்கியது எப்படி?

கண்ணன் ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகள், நெருக்கமாக இருக்கும் கடைவீதிகளில் வாகனத் திருட்டில் ஈடுபட்டிருக்கிறார். திருடிய வாகனங்களைத் தனக்கு நெருக்கமான சில மெக்கானிக்குகள் மூலம், நம்பர் பிளேட்டை மாற்றி, குறைவான விலைக்கு விற்பனை செய்துவந்திருக்கிறார்.

Published:Updated:
புதுக்கோட்டையை அலறவிட்ட டூ வீலர் திருடன்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தமங்கலம், ஆலங்குடி, கறம்பக்குடி எனப் பல்வேறு பகுதிகளில், கடந்த ஆறு மாதங்களாக வாகனத் திருட்டுச் சம்பவங்கள் அதிக அளவில் நடந்துகொண்டிருக்கின்றன. அதன் காரணமாக, இந்தப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் வாகன திருட்டு வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில், நகரக் காவல் ஆய்வாளர் குருநாதன் தலைமையில் வாகனத் திருட்டு கும்பலைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது.

கண்ணன்
கண்ணன்

தனிப்படையினர் கடந்த சில வாரங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டைப் பழைய பேருந்து நிலையம் அருகே, இளைஞர் ஒருவர் வாகனம் ஒன்றைத் திருட முயன்றிருக்கிறார். அதைக் கண்ட பகுதி மக்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து, சந்தேகத்தின் பேரில் நகர போலீஸார் அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பதும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இருச க்கர வாகனங்களைத் திருடியிருப்பதும் தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதையடுத்து, போலீஸார் பிடிபட்ட கண்ணனின் கூட்டாளிகளைப் பிடித்து, அவர்கள் மூலம் விற்கப்பட்ட 32 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட இரு சக்கர வாகனங்களின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கண்ணனைக் கைதுசெய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கண்ணனிடமிருந்து மீட்கப்பட்ட இருசக்கர வாகனங்கள்
கண்ணனிடமிருந்து மீட்கப்பட்ட இருசக்கர வாகனங்கள்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய போலீஸார், ``நகரக் காவல் நிலைய எல்லைக்குள் பல இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகிறோம். பிடிபட்டிருக்கும் கண்ணன் ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகள், நெருக்கமாக இருக்கும் கடைவீதிகளில் வாகனத் திருட்டில் ஈடுபட்டிருக்கிறார். திருடிய வாகனங்களைத் தனக்கு நெருக்கமான சில மெக்கானிக்குகள் மூலம், நம்பர் பிளேட்டை மாற்றிக் குறைவான விலைக்கு விற்பனை செய்து வந்திருக்கிறார். இதுவரை 32 இரு சக்கர வாகனங்களை மீட்டிருக்கிறோம். 100-க்கும் அதிகமான இரு சக்கர வாகனங்களைக் கண்ணன் திருடியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்.