Published:Updated:

புதுக்கோட்டை: நகையைத் திருடிவிட்டு நாடகம்; புரூனே வியாபாரியின் உறவினர்கள் போலீஸில் சிக்கியது எப்படி?

கொள்ளை

ஜகுபர் சாதிக்கின் உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த கமருஜமான் (41), ஆர்.புதுப்பட்டினத்தைச் சேர்ந்த அசாருதின் (26) இருவரும் ஜகுபர் சாதிக்கின் வீடு புகுந்து நகைகளைத் திருடியது விசாரணையில் தெரியவந்தது.

புதுக்கோட்டை: நகையைத் திருடிவிட்டு நாடகம்; புரூனே வியாபாரியின் உறவினர்கள் போலீஸில் சிக்கியது எப்படி?

ஜகுபர் சாதிக்கின் உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த கமருஜமான் (41), ஆர்.புதுப்பட்டினத்தைச் சேர்ந்த அசாருதின் (26) இருவரும் ஜகுபர் சாதிக்கின் வீடு புகுந்து நகைகளைத் திருடியது விசாரணையில் தெரியவந்தது.

Published:Updated:
கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஜகுபர் சாதிக் (45). இவர் தென்கிழக்கு ஆசிய நாடான புரூனேவில் கடந்த சில வருடங்களாக குடும்பத்துடன் தங்கி வசித்துவருகிறார். அங்கு பல்பொருள் அங்காடிகளையும் நடத்திவருகிறார். கோபாலப்பட்டினம் நடுத்தெருவில் இவருக்குச் சொந்தமான வீடு இருக்கிறது. இந்த வீட்டை உறவினர்களின் பாதுகாப்பில் விட்டிருந்தார்.

இந்த நிலையில்தான், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 687 பவுன் தங்க நகைகள் காணாமல்போயின. மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து, மீமிசல் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. உறவினர்கள்தான் நகைகளைத் திருடியிருக்கக்கூடும் என்ற கோணத்தில் அவரின் உறவினர்களிடம் தனிப்படைப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில், அந்த வீட்டின் வெளிப்புறம் உறை கிணற்றில் நகைகளைப் போட்டிருக்கலாம் என்ற கோணத்தில், கிணற்றின் தண்ணீரை இறைத்து வெளியேற்றியபோது ஒரு மூட்டையில் தங்க நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. கிணற்றுக்குள் இருந்த மூட்டையிலிருந்து வளையல், சங்கிலிகள் என 559 பவுன் நகைகள் போலீஸாரால் மீட்கப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதையடுத்து, மீதி நகைகள் எங்கே போயின என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்திவந்த நிலையில், ஜகுபர் சாதிக்கின் உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த கமருஜமான் (41), ஆர்.புதுப்பட்டினத்தைச் சேர்ந்த அசாருதின் (26) இருவரும்தான் ஜகுபர் சாதிக்கின் வீடு புகுந்து நகைகளைத் திருடினார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். அவர்கள் கையிலிருந்த ஒன்பது பவுன் நகைகளையும் மீட்டனர். இருவரும் தஞ்சாவூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீடு
கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீடு

இது பற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``கமருஜமான் ஜகுபர் சாதிக்கின் நெருங்கிய உறவினர், கமருஜமானும் வெளிநாட்டில் வேலை பார்த்துவந்திருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர், ஊருக்கு வராமல், அசாருதினுடன் சேர்ந்து ஜகுபர் சாதிக்கின் வீட்டில், நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு, சம்பவம் நடைபெற்ற இரண்டு நாள் கழித்து வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வருவதுபோல் காட்டிக்கொண்டுள்ளார். இந்த நிலையில்தான், உறவினர்களுக்கு போலீஸார் தொடர்ந்து நெருக்கடி கொடுக்க, நகைகளைக் கிணற்றுக்குள் போட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஜகுபர் சாதிக்குக்காக இரக்கப்பட்டுப் பேசிவந்தவர், சிறிது நாள்கள் எங்களது விசாரணையிலும் தப்பித்துவந்தார். இந்த நிலையில், வழக்கில் இருவரையும் கைதுசெய்து தொடர்ந்து விசாரித்துவருகிறோம்" என்றனர்.

நகைகள் திருட்டுபோன வழக்கில் உறவினர்களே நகைகளைத் திருடிவிட்டு நாடகமாடியது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism