Published:Updated:

திருவண்ணாமலை: 4-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது!

போக்சோ சட்டம்

நான்காம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை: 4-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது!

நான்காம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Published:Updated:
போக்சோ சட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பரிதிபுரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். 57 வயதாகும் இந்த நபர், வெம்பாக்கம் அருகேயுள்ள சட்டுவந்தாங்கல், அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். இவருக்குத் திருமண வயதில் இரண்டு மகன்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தான் பணிபுரியும் தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்துவரும் சிறுமி ஒருவருக்கு ராமலிங்கம் கடந்த சில நாள்களாக பாலியல்ரீதியான தொல்லை அளித்துவந்தாராம்.

திருவண்ணாமலை எஸ்.பி ஆபீஸ்
திருவண்ணாமலை எஸ்.பி ஆபீஸ்

இதை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது எனக் கூறி சிறுமியை அந்த நபர் மிரட்டி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. தனக்குக் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர், தனக்கு தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை அளித்துவருவது பற்றி, அந்தச் சிறுமி தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி போலீஸார் ராமலிங்கத்திடம் விசாரணை நடத்தியதில் அவர் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, 20-ம் தேதி ராமலிங்கத்தைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீஸார்.

நல்ல பாடங்களையும், ஒழுக்கத்தையும் சொல்லித் தரவேண்டிய ஆசிரியரே 4-ம் வகுப்பு படிக்கும் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism