Published:Updated:

போதை... குத்திக் கொலை... இறுதிச்சடங்கு! - தந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் சிக்கியது எப்படி?

நாடகமாடிய மகன் சிக்கியது எப்படி?

திருச்சியில் இறுதிச்சடங்கு செய்யவிருந்த நேரத்தில், சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி போலீஸார் சடலத்தைக் கைப்பற்றியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

போதை... குத்திக் கொலை... இறுதிச்சடங்கு! - தந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் சிக்கியது எப்படி?

திருச்சியில் இறுதிச்சடங்கு செய்யவிருந்த நேரத்தில், சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி போலீஸார் சடலத்தைக் கைப்பற்றியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
நாடகமாடிய மகன் சிக்கியது எப்படி?

திருச்சி, தென்னூர், சின்னசாமி நகரைச் சேர்ந்தவர் முருகன் (52). முறுக்கு விற்பனை தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் என மொத்தம் 3 வாரிசுகள். குடிப் பழக்கத்திற்கு அடிமையான முருகன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பிரச்னை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு தள்ளாடியபடி போதையில் வீட்டிற்கு வந்த முருகன், அவர் மனைவி மற்றும் மூத்த மகன் விஜயகுமாரின் மனைவியைப் பற்றி அசிங்கமாகப் பேசி பிரச்னை செய்திருக்கிறார். இதில் கோபமடைந்த மகன் விஜயகுமார் கத்தியை எடுத்து, அவர் தந்தை முருகனின் வயிற்றில் ஓங்கி குத்தியிருக்கிறார். இதில் அலறியபடி முருகன் கீழே விழுந்து துடித்திருக்கிறார். லேசான போதையில் இருந்ததாகச் சொல்லப்படும் விஜயகுமாரும் நடந்த சம்பவத்தை உணராமல், வீட்டில் போய் படுத்துத் தூங்கியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
முருகன் வீடு
முருகன் வீடு

விடியற்காலையில் எழுந்து பார்த்தபோது கடுமையான ரத்தப்போக்குடன் முருகன் வீட்டின் முன் கீழே விழுந்து கிடந்திருக்கிறார். குடும்பத்தார் பதறிப்போய் முருகனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு ஏற்கெனவே முருகன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். அதனைக்கேட்டு பதறிப்போன விஜயகுமார் மற்றும் குடும்பத்தார், வெளியே தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என அவசர அவசரமாக இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். முருகன் குடிபோதையில் இயற்கையாக மரணமடைந்ததாகச் சொல்லி உறவினர்களை வரவழைத்து இறுதிச் சடங்கு நடந்திருக்கிறது. இதற்கிடையே அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், முருகனின் சாவையும், நேற்று முன் தினம் இரவு முருகனுக்கும், விஜயகுமாருக்கும் இடையே நடந்த பிரச்னையையும் தொடர்புபடுத்தி போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

முருகன் - விஜயகுமார்
முருகன் - விஜயகுமார்

அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தில்லைநகர் போலீஸார், முருகனின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். விசாரணையில், ‘குடிபோதையில் இருந்த முருகனை, மகன் விஜயகுமார் கத்தியால் குத்தியதால் தான் உயிரிழக்க நேர்ந்தது’ என்ற உண்மை தெரிந்துள்ளது. அதையடுத்து, முருகனின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விஜயகுமாரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தந்தையை கத்தியால் குத்திக் கொலைசெய்த மகன், அவர் இயற்கை மரணம் அடைந்ததாக நாடகம் ஆடி இறுதிச் சடங்கு செய்ய முயன்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.