Published:Updated:

மகாராஷ்டிரா: 80 வயதில் திருமணத்துக்கு வரன் தேடிய தந்தை; கோபத்தில் மகன் எடுத்த விபரீத முடிவு!

கொலை
News
கொலை

80 வயதில் திருமணத்துக்கு பெண் தேடி இணையத்தளத்தில் பதிவு செய்த தந்தையை அவர் மகன் வெட்டிக்கொலை செய்தார்.

வயதான காலத்தில் வாழ்க்கை துணையை இழந்தவர்கள் சில நேரங்களில் புதிய வாழ்க்கை துணையை தேடிக்கொள்வது வழக்கம். அப்படி புதிய வாழ்க்கை துணையை தேட நினைத்த 80 வயது முதியவர் தன் மகனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள கேட் ராஜ்குரு நகரில் வசித்தவர் சங்கர் போர்டே (80). மனைவியை இழந்த இவர் தன் மகன் சேகருடன் வசித்து வந்தார். கடைசிக்காலத்தில் சேகர் தன் தந்தையை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனால் சங்கர் புதிய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தன் பெயரை திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். இது குறித்து சேகருக்கு தெரியவந்தது. இதனால் கடும் கோபமடைந்த சேகர் தந்தை புதிய திருமணம் செய்து கொண்டால் தனது சொத்தில் பங்கு கொடுக்கவேண்டிய சூழ்நிலை வரும் என்று கருதியிருக்கிறார்.

கொலை
கொலை

இதனால் சேகர் அரிவாளால் தன் தந்தையை தோளில் வெட்டினார். அதோடு கோபம் அடங்காமல் அம்மிக் கல்லை எடுத்து தன் தந்தையின் தலையில் போட்டு அவரைக் கொலைசெய்தார். அப்போதும் ஆத்திரம் தனியாத சேகர், அவரின் தலையை துண்டுத் துண்டாக வெட்டி எடுக்கவும் முயற்சி செய்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கைது
கைது

பின்னர், நேரடியாக போலீஸ் நிலையத்துக்கு சென்று தன் தந்தையைக் கொலை செய்துவிட்டதாகக் கூறி சரணடைந்தார். இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என்ற கோபத்தில் இந்த காரியத்தை செய்துவிட்டதாக சேகர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதையடுத்து, போலீஸார் சேகரை கைது செய்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புனேவில் கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு குற்றச் சம்பவங்கள் 121 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 2020-ம் ஆண்டில் மட்டும் புனேவில் 3,5847 குற்றங்கள் நடந்திருக்கின்றன.