Published:Updated:

பட்டாக்கத்திகளுடன் அரசுப் பேருந்தில் ரகளை! - சாலையில் தீப்பொறி பறக்க மாணவர்களை விரட்டிய கும்பல்

கைது

சென்னை அண்ணாநகர் பகுதியில் பட்டாகத்தியை சாலையில் உரசி தீப்பொறி பறக்க, பறக்க ஒரு கல்லூரி மாணவர்களை இன்னொரு கல்லூரி மாணவர்கள் விரட்டிச் சென்ற வீடியோ வைரலாகிவருகிறது.

பட்டாக்கத்திகளுடன் அரசுப் பேருந்தில் ரகளை! - சாலையில் தீப்பொறி பறக்க மாணவர்களை விரட்டிய கும்பல்

சென்னை அண்ணாநகர் பகுதியில் பட்டாகத்தியை சாலையில் உரசி தீப்பொறி பறக்க, பறக்க ஒரு கல்லூரி மாணவர்களை இன்னொரு கல்லூரி மாணவர்கள் விரட்டிச் சென்ற வீடியோ வைரலாகிவருகிறது.

Published:Updated:
கைது

சென்னை அண்ணா சதுக்கத்திலிருந்து ஆவடி நோக்கி அரசுப் பேருந்து தடம் எண் `40 எச்' சென்று கொண்டிருந்தது. அண்ணா நகர் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பஸ்ஸின் முன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிலர் கூட்டமாக வந்து பேருந்தை வழிமறித்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் பயணம்செய்த இன்னொரு கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை கீழே இறக்கிவிடும்படி கூச்சலிட்டனர்.

அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து
கோப்பு படம்

ஆனால் அந்த இரண்டு மாணவர்களும் கீழே இறங்காததால் பேருந்தின் கதவை திறக்கும்படி அந்தக் கல்லூரி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் பேருந்து டிரைவர், கண்டக்டர், பயணிகள் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பேருந்துக்குள் ஏறிய மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்த இன்னொரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்துக்கொண்டு பூந்தமல்லி சாலையில் உள்ள கல்லூரி மாணவர்களை விரட்டினர். அதனால் மாணவர்கள் சிதறி ஓடினர். விரட்டிச் செல்லும்போது பட்டா கத்தியை அவர்கள் சாலையில் உரசியபடி சென்றதால் தீப்பொறி பறந்தது. அதைப்பார்த்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பேருந்தை விட்டு கீழே இறங்கி ஓடினர். இந்தக் காட்சிகளை அவ்வழியாக சென்ற சிலர் தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர்.

கைது
கைது

அந்த வீடியோ வைரலானதும் அண்ணாநகர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து வீடியோ பதிவு அடிப்படையில் சென்னை பாடி குப்பம் பகுதியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களைக் கைதுசெய்து கத்தியை பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். சமூக வலைத்தளத்திலிருந்த வீடியோவை போலீஸார் உடனடியாக நீக்கினர்.