Published:Updated:

மனைவியைக் கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த கணவன்; காட்டிக்கொடுத்த நாய்கள்!

கொலை
கொலை

கடந்த சில நாள்களாக, வடுகம்பாளின் நடமாட்டம் இல்லாததால், அக்கம் பக்கத்து வீட்டினர் பாலையாவிடம் இது குறித்துக் கேட்டிருக்கிறார்கள்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மடப்புரம் காலனியைச் சேர்ந்தவர் பாலையன். இவர், இடுகாட்டில் தொழிலாளராகப் பணிபுரிந்துவருகிறார். இவருடைய மனைவி வடுகம்பாள். இவர்களின் மகள் திருமணமாகி சென்னையில் வசித்துவருகிறார். பாலையன் -வடுகம்பாள் தம்பதியர் இங்கு தனியாக வசித்துவந்திருக்கிறார்கள். கடந்த சில நாள்களாக, வடுகம்பாளின் நடமாட்டம் இல்லாததால், அக்கம் பக்கத்து வீட்டினர் பாலையாவிடம் இது குறித்துக் கேட்டிருக்கிறார்கள்.

`12.30 மணிக்கு கொலை முயற்சி; 2.30 மணிக்கு கொலை!’ -  அடுத்தடுத்த குற்றங்களை அரங்கேற்றிய கும்பல்
இறந்துபோன வடுகம்பாள்
இறந்துபோன வடுகம்பாள்

தனது மனைவி வடுகம்பாள் வெளியூர் சென்றிருப்பதாக, பாலையா கூறியிருக்கிறார். அவர் சொன்னதை, அவர்கள் நம்பிவிட்டார்கள். இதற்கிடையில்தான் பாலையாவின் வீட்டின் பின்புறத்துக்கு நாய்கள் சென்று மண்ணைத் தோண்டியுள்ளன. இதனால் சந்தேகமடைந்த அந்தப் பகுதி மக்கள் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக பாலையாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டபோதுதான், அந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தன் மனைவியைக் கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்துவிட்டதாக பாலையா தெரிவித்திருக்கிறார். அந்த இடத்தைத் தோண்டி, வடுகம்பாளின் பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பிவைத்தனர்.

இது குறித்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் கூறுகையில், ``கடந்த சனிக்கிழமை கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாலையா கோபமடைந்து, தனது மனைவியைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். அதன் பிறகு அங்கிருந்து வெளியில் கிளம்பிச் சென்றுவிட்டு, சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்திருக்கிறார் பாலையா. அப்போது வடுகம்பாள் இறந்து கிடந்திருக்கிறார். இது வெளியில் தெரிந்தால், காவல்துறையில் சிக்கிக்கொள்வோம் என பயந்து, வீட்டின் கொல்லைப்புறத்தில் குழி தோண்டி, வடுகம்பாளை பாலையா புதைத்திருக்கிறார்’’ எனத் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு