Published:Updated:

``இந்தக் கரு என் வாரிசு கிடையாது..!" - கர்ப்பிணியைக் கழுத்தறுத்துக் கொன்ற கணவன்

கொலை செய்த கணவர் வேல்முருகன்

மனைவி கருவுற்ற நிலையில், ``அது என் வாரிசு கிடையாது..!" எனச் சந்தேகித்த கணவர், மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்றார்.

``இந்தக் கரு என் வாரிசு கிடையாது..!" - கர்ப்பிணியைக் கழுத்தறுத்துக் கொன்ற கணவன்

மனைவி கருவுற்ற நிலையில், ``அது என் வாரிசு கிடையாது..!" எனச் சந்தேகித்த கணவர், மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்றார்.

Published:Updated:
கொலை செய்த கணவர் வேல்முருகன்

சித்தூர் மாவட்டம், குப்பம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். 32 வயதாகும், இந்த நபர் பானிபூரி விற்கிறார். இவருக்கும் திருப்பத்தூர் மாவட்டம், எலவம்பட்டி ஜீவநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் அருள்மொழிக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் அருள்மொழி கருத்தரிக்கவில்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் அருள்மொழிக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நெருங்கிப் பழகியிருக்கிறார்கள். இது கணவருக்கும் தெரியவந்திருக்கிறது. தவறான உறவைக் கைவிடும்படி அவர் எச்சரித்துவந்திருக்கிறார். இந்தச் சூழலில், நான்கு மாதங்களுக்கு முன்பு அருள்மொழி திடீரென கர்ப்பமடைந்தார். ‘‘வயிற்றில் வளரும் கரு தன்னுடைய ‘வாரிசு’ இல்லை’’ என மனைவியின் நடத்தையில் சந்தேகித்து தகராறு செய்துவந்திருக்கிறார் வேல்முருகன். தகராறு நீடிக்கவே... கடந்த மாதம் வீட்டைவிட்டு வெளியேறி அந்த இளைஞருடன் தலைமறைவானார் அருள்மொழி.

வேல்முருகன்
வேல்முருகன்

மனைவியைக் கண்டுபிடித்துத் தரக் கோரி குப்பம் போலீஸில் வேல்முருகன் புகார் செய்தார். போலீஸார் விசாரணை நடத்தித் தேடிவந்த நிலையில், புதுச்சேரியில் இருவரும் ஜோடியாகப் பிடிபட்டனர். பின்னர், அருள்மொழிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்காக மாமனார் வீட்டுக்கு வந்திருக்கிறார் வேல்முருகன். இரண்டு நாள்களாக மாமனார் வீட்டிலேயே தங்கியிருந்த வேல்முருகன், கருவுற்ற விவகாரம் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பி மனைவியிடம் தகராறு செய்தார். ஆத்திரம் அடங்காத அவர் கழுத்தை அறுத்து மனைவியை கொடூரமாகக் கொலைசெய்துவிட்டுத் தப்பினார்.

கைது
கைது

கந்திலி போலீஸார், அருள்மொழியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தப்பி ஓடிய வேல்முருகனைத் தேடியபோது அவர் குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விரைந்த கந்திலி போலீஸார் வேல்முருகனைக் கைதுசெய்து அழைத்து வந்தனர். இந்தச் சம்பவம், திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.