Published:Updated:

சென்னை: அலுவலக அறையைச் சுத்தம் செய்ய வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்; வருமான வரித்துறை அதிகாரி கைது!

கைது

அலுவலக அறையைச் சுத்தம் செய்ய வந்த பெண்ணைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் சென்னையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை: அலுவலக அறையைச் சுத்தம் செய்ய வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்; வருமான வரித்துறை அதிகாரி கைது!

அலுவலக அறையைச் சுத்தம் செய்ய வந்த பெண்ணைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் சென்னையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமான வரித்துறை அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இங்கு ஏராளமானவர்கள் பணியாற்றிவருகிறார்கள். இந்த அலுவலகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக மூத்த வரி விதிப்பு அதிகாரியாக ரெக்ஸ் (36) என்பவர் வேலை பார்த்துவருகிறார். இந்த அலுவலகத்தில் கணவனை இழந்த 34 வயதுடைய பெண் ஒருவர் கடந்த ஆறு வருடங்களாக அலுவலகத்தைச் சுத்தம் செய்யும் பணியைச் செய்துவருகிறார். இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி அதிகாரி ரெக்ஸின் அறையைச் சுத்தம் செய்யச் சென்றிருக்கிறார் அந்தப் பெண். அப்போது திடீரென தன்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதாக ரெக்ஸ் மீது அந்தப் பெண் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக வருமான வரித்துறை உயரதிகாரிகளிடமும் அந்தப் பெண் புகாரளித்தார். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

வருமான வரித்துறை
வருமான வரித்துறை
ட்விட்டர்

மேலும், அந்தப் பெண்ணிடம் சிலர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிகிறது. அதனால் மனமுடைந்த அந்தப் பெண் கடந்த 15-ம் தேதி வீட்டில் விஷம் குடித்தார். அதனால் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அந்தப் பெண், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரெக்ஸ் மீது புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து ரெக்ஸைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் வருமான வரித்துறை அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.