Published:Updated:

நீலகிரி கலெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த டெல்லி நபர்; 4 மாதங்களுக்கு பின் சிக்கியது எப்படி?!

நீலகிரி

நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைதுசெய்தனர்.

நீலகிரி கலெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த டெல்லி நபர்; 4 மாதங்களுக்கு பின் சிக்கியது எப்படி?!

நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
நீலகிரி

கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி இரவு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்துக்கு அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்கிறது. ஊட்டியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிட்ப்பட்டுள்ளது. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்து மாவட்டத்தின் பல இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். போலீஸார் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல்

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருப்பதை உறுதி செய்தனர். உடனடியாக விரைந்த ஊட்டி காவல்துறையினர் அந்த நபரை கைதுசெய்து விசாரணை நடத்தினர். பின்னர், ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய காவல்துறையினர், "வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை சைபர் க்ரைம் பிரிவில் பகிர்ந்து விசாரணை நடத்தி வந்தோம். இதன் அடிப்படையிலேயே இந்த நபர் இருக்கும் இடத்தை கண்டறிய முடிந்தது. அந்த நபரை பிடித்து விசாரித்ததில், டெல்லியைச் சேர்ந்த நிதின் ஷர்மா என்பவர் இந்த செயலில் ஈடுபட்டதை உறுதிசெய்தோம்.

நிதின் ஷர்மா
நிதின் ஷர்மா

செல்போன் திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் பல மாநிலங்களில் இவர் மீது பதியப்பட்டுள்ளன. மேலும், வழிபாட்டு தலங்களில் பணத்தை ஏமாற்றிப் பெற்று ஆடம்பரமாக வாழ்ந்து வந்திருக்கிறார். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் அளவிற்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இல்லை. பரபரப்பு ஏற்படுத்தி காவல்துறையினரை அலைக்கழிக்கும் நோக்கத்தில் இப்படி போலியான மிரட்டல் விடுத்திருக்கிறார். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்" என்றனர்.