Published:Updated:

`ஒரே இடத்தில் உட்கார முடியவில்லை..!' -தஞ்சை போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த 2 கைதிகள்

பாபநாசம்
பாபநாசம்

கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்குப் பிறகு தப்பியோடிச் சென்றவர்களை பிடித்ததுடன் உடனடியாக புதுக்கோட்டையில் உள்ள சிறைக்கு அனுப்பி வைத்தோம்.

தஞ்சாவூர் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் 15 அடி உயரம் கொண்ட சிறையின் சுவர் மீது ஏறிக் குதித்து தப்பிச் சென்ற சம்பவம் போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வீரப்பன்
வீரப்பன்

தஞ்சாவூர் அருகே உள்ள பாபநாசத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன், ஆடுதுறை பகுதியைச் சேர்ந்த கண்ணன் ஆகிய இருவரையும் போலீஸார் கடந்த 22-ம் தேதி கைது செய்து பாபநாசம் நீதிமன்றத்துக்கு பின்புறம் அமைந்துள்ள கிளைச் சிறையில் அடைத்தனர்.

`மருந்து விஷயத்தில் பின்தங்கியுள்ளோம்.. கொரோனா வைரஸ் செம ஸ்மார்ட்!’ -  அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இந்த நிலையில், நேற்று மாலை இருவரும் சிறையிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, தப்பிச் சென்ற இருவரையும் அடுத்த மூன்று மணி நேரத்தில் கைது செய்ததுடன் எப்படி தப்பித்துச் சென்றார்கள் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கண்ணன்
கண்ணன்

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம், ``திருட்டு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் வீரப்பன், கண்ணன். இவர்கள் போலீஸாரால் பல நாள்களாக தேடப்பட்டு வந்தனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்து கிளைச் சிறையில் அடைத்தோம். பின்னர் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சிறையிலேயே அவர்கள் இருந்தனர்.

இதையடுத்து, எங்களால் ஒரே இடத்தில் இருக்க முடியவில்லை என இருவரும் கூறிவந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், நேற்று மாலை சிறையின் மதில் சுவர் மீது ஏறிக் குதித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்த தகவல் வந்ததும் மீண்டும் அவர்களைப் பிடிப்பதற்கான செயலில் இறங்கினோம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்குப் பிறகு தப்பியோடிச் சென்றவர்களை பிடித்ததுடன் உடனடியாக புதுக்கோட்டையில் உள்ள சிறைக்கு அனுப்பி வைத்தோம்.

பாபநாசம்
பாபநாசம்

பாபநாசம் கிளைச் சிறையின் மதில் சுவர் சுமார் 15 அடி உயரம் இருக்கும். இவ்வளவு உயரம் கொண்ட சுவரை எப்படி அவர்களால் ஏறிக் குதித்து தப்பியோடியிருக்க முடியும் எனவும் வேறு யாராவது அவர்களுக்கு உதவி செய்தார்களா என்கிற அடிப்படையில் விசாரணை செய்து வருகிறோம்" என்கின்றனர். இந்தச் சம்பவம் தஞ்சை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த கட்டுரைக்கு