Published:Updated:

500 நெல் மூட்டைகளுடன் லாரியைக் கடத்திய நபர் - அதிரடிகாட்டிய போலீஸ்!

நெல் மூட்டை
நெல் மூட்டை

மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது நெல் மூட்டைகளுடன் லாரி கடத்தப்பட்டது தெரியவந்தது. இது குறித்து லாரி உரிமையாளர் விஜயகுமார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் வைப்பதற்காக லாரியில் கொண்டுவரப்பட்ட 500 நெல் மூட்டைகளை லாரியுடன் கடத்திச் சென்ற நபரை தீவிரத் தேடுதலுக்கு பிறகு போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

நெல் மூட்டை
நெல் மூட்டை

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு, கீழமருதாந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ. லாரி ஓட்டுநரான இவர் கடந்த 28 -ம் தேதி மணல்மேடு கேசிங்கன் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 500 நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறையிலுள்ள நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு முன்பு நிறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். மறுநாள் காலையில்  சென்று பார்த்தபோது நெல் மூட்டைகளுடன் லாரி கடத்தப்பட்டது தெரியவந்தது. இது குறித்து லாரி உரிமையாளர் விஜயகுமார், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு இதே போன்று மயிலாடுதுறை கூறைநாடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் நெல் மூட்டைகளுடன் லாரியை கடத்திச் சென்றதும், பின்னர் போலீஸாரிடம் சிக்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபர் கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அட்சயநல்லூர் கொத்தட்டை என்ற கிராமத்திலுள்ள அவரது இரண்டாவது மனைவியின் வீட்டுக்குச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடிச்சென்று பார்த்தபோது, அவர் அந்த  வீட்டின் முன்பு லாரியை நிறுத்திவிட்டு பதுங்கியிருந்தது தெரியவந்தது.

தூத்துக்குடி: `தெரு நாய்களுக்கு பிஸ்கட்; ஜன்னல் வழியே திருட்டு'- நள்ளிரவில் தொடரும் சம்பவம்!
மயிலாடுதுறை
மயிலாடுதுறை

இதையடுத்து வீட்டைச் சுற்றிவளைத்த போலீஸார் ரூ.11.9 லட்சம் மதிப்புள்ள லாரி மற்றும் நெல் மூட்டைகளைக் கைப்பற்றி, சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், லாரியிலிருந்த நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கிலும், லாரியை நீதிமன்றத்திலும் போலீஸார் ஒப்படைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு