Published:Updated:

போதையில் சித்ரவதைசெய்த கணவன்; தலையில் கல்லைப் போட்டு கொலைசெய்த மனைவி! - ஆவடியில் பயங்கரம்

க்ரைம் - கொலை

போதையில் சித்ரவதைசெய்த கணவனை கொலைசெய்த மாணவியை போலீஸார் கைதுசெய்தனர்.

போதையில் சித்ரவதைசெய்த கணவன்; தலையில் கல்லைப் போட்டு கொலைசெய்த மனைவி! - ஆவடியில் பயங்கரம்

போதையில் சித்ரவதைசெய்த கணவனை கொலைசெய்த மாணவியை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
க்ரைம் - கொலை

ஆவடிக்கு அருகில் உள்ள தும்பூர் பகுதியில் ஒரு செங்கல் சூளை இயங்கிவருகிறது. இங்கு, விழுப்புரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், அவர் மனைவி விஜயலட்சுமி இருவரும் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் ஆகியோர் இருக்கின்றனர். கிருஷ்ணனுக்கு அதீத மதுப்பழக்கம் இருந்து வந்திருக்கிறது. அவர் தினமும் குடித்துவிட்டுவந்து விஜயலட்சுமியை அடித்து, அவருடன் தகராறு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

இந்த நிலையில், நேற்று இரவு மதுபோதையில்வந்த கிருஷ்ணன், விஜயலட்சுமியுடன் தகராறு செய்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி அருகிலிருந்த பெரிய கல்லை எடுத்துவந்து கிருஷ்ணன் தலையில் போட்டிருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டுவந்த சக ஊழியர்கள் நடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து முத்தாப்புதுப்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 கைது செய்யப்பட்ட விஜயலட்சுமி
கைது செய்யப்பட்ட விஜயலட்சுமி

விஷயமறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், இறந்த கிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விஜயலட்சுமியை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும், இந்த கொலைக்கான காரணம் குறித்துத் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.