Published:Updated:

பாத்ரூமில் கேமரா; அதிர்ச்சியடைந்த பெண்; போலீஸ் விசாரணையில் கைதான இளைஞர்!

வீட்டில் கேமரா வைத்த நசீர் அகமது
வீட்டில் கேமரா வைத்த நசீர் அகமது

வெப் கேமராவை கட்டி சார்ஜ் இறங்காமல் இருப்பதற்காக பவர் பேங் இணைத்து அதனை பிளக் பாயிண்டில், இணைத்திருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.

தஞ்சாவூர் தெற்குவீதியை சேர்ந்த ரமேஷ் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். கடந்த வெள்ளிகிழமை இவரது வீட்டின் பாத்ரூம் ஜன்னல் பகுதியிலிருந்து சிகப்பு கலரில் சிறிய அளவிலான லைட் மின்னுவது போல் எரிந்துள்ளது. இதனைப் பார்த்த ரமேஷின் மனைவி அதிர்ச்சியடைந்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

வீடு
வீடு

இதையடுத்து ரமேஷ் பாத்ரூமிற்கு ஜன்னல் பகுதியில் பார்த்ததில் மரக்குச்சி ஒன்றில் வெப் கேமராவை கட்டி சார்ஜ் இறங்காமல் இருப்பதற்காக பவர் பேங் இணைத்து அதனை பிளக் பாயிண்டில் இணைத்திருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸ் ரமேஷ் வீட்டிற்கு அருகில் வசிக்கும் நசீர்அகமது (35) என்பவர் பாத்ரூமில் குளிக்கும் பெண்களை படம் எடுப்பதற்காக சிறிய அளவிலான வெப் கேமராவை வைத்திருந்ததைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்ததுடன் மேலும் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், "எனது வீட்டின் அருகில் இருப்பவர் நசீர் அகமது, அவரது மனைவி அங்கன் வாடியில் வேலை செய்து வருகிறார். அவர்களுக்கு ஆறு வயதில் பெண் குழந்தை உள்ளது. நசீர் அகமதுவின் அப்பா முகமது இக்பால் காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது. இதற்கு முன்பு நசீர் அகமது அவர் வீட்டு மாடியில் நின்று கொண்டு எனது மகள் மற்றும் மனைவி குளிப்பதை பார்த்தார். இதனை நான் நசீரின் அப்பா முகமது இக்பாலிடம் சென்று சொன்னதற்கு, "பாத்ரூம் திறந்து கிடந்தா பார்க்கத்தான் செய்வாங்க பாத்ரூம வேணுனா மூடிக்கோ" எனச் சொல்லி சண்டையிட்டார். தற்போது என் வீட்டு பாத்ரூமில் கேமரா வைத்திருக்கிறார்.

பாத்ரூம்
பாத்ரூம்
`இளம்பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த போலீஸ் கைது!’ – சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட டி.ஜி.பி!

எங்க வீட்டுக்கும் நசீர் அகமது வீட்டுக்கும் நடுவில் ஒரு வீடு உள்ளது. காலியாக உள்ள அந்த வீட்டை வாடகைக்கு கேட்டு வந்தால் காண்பிப்பதற்காக அந்த வீட்டு உரிமையாளர் சாவியை நசீர் வீட்டில் கொடுத்து வைத்திருந்தார்.அதனை பயன்படுத்தி கொண்ட நசீர் அந்த வீட்டு ஜன்னலில் இருந்த கண்ணாடியை எடுத்து விட்டு அதன் வழியாக ஒரு அடி தூரத்தில் இருந்த எங்க வீட்டு ஜன்னலில் மரக்குச்சி ஒன்றில் கட்டி கேமார வைத்துள்ளார். கேமரா ஆஃப் ஆகாமல் இருப்பதற்காக அதனுடன் பவர் பேங்கையும் இணைந்து எந்நேரமும் ஜார்ஜ் ஏறக்கூடிய வகையில் செட் செய்திருக்கிறார். எனது மனைவி மற்றும் மகள் குளிப்பதை வீடியோ எடுக்கவே இதனை செய்துள்ளார்.எப்போது கேமரா பொறுத்தினார் எனத் தெரியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணியளவில் குளிக்க சென்ற மனைவி ஜன்னலில் சிகப்பு மற்றும் பச்சை கலரின் லைட் எரிவதைப் பார்த்து என்னிடம் கூறியதால் தற்போது இவை தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தேன். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்த கேமரா, பவர் பேங்க் மற்றும் மெமரி கார்டு ஆகிவற்றைக் கைப்பற்றி விசாரணை செய்து வருவதாகவும் அதன் பிறகே மேற்கொண்ட விவரங்கள் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர் " என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`மெட்ராஸ் டே' Quiz

`மெட்ராஸ் டே' Quiz
`மெட்ராஸ் டே' Quiz

நீங்க தஞ்சாவூரா இருக்கலாம், வந்தவாசியா இருக்கலாம், மதுரையா இருக்கலாம். இல்ல... கன்னியாகுமரியாகூட இருக்கலாம். ஆனா, நம்ம எல்லாருடைய லைஃப்லயும் சென்னை கலந்திருக்கும். நாம சென்னையைக் கடந்திருப்போம். அப்படி நம்ம லைஃபோட கலந்திருக்குற சென்னையைப் பத்தி நமக்கு எவ்வளவு தெரியும்? இந்த quiz -ஐ attend பண்ணுங்க!

கலந்துகொள்ள க்ளிக் செய்க - https://bit.ly/3gl7qMl

அடுத்த கட்டுரைக்கு