Published:Updated:

திருப்பூர்: போக்சோ வழக்கு; போலீஸ் காவலிலிருந்து தப்பியவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கைது!

சுப்பிரமணி

தாராபுரத்தில் போக்சோ வழக்கில் கைதாகி வலிப்பு நோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பித்த இளைஞரை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸார் கைதுசெய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த குண்டடம் பொட்டிக்காபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (35). கட்டடத் தொழிலாளியான இவர், 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ மற்றும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து, 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி, சுப்பிரமணி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.

போக்சோ
போக்சோ

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுப்பிரமணிக்கு வலிப்பு ஏற்பட்டதால் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கழிவறைக்குச் சென்ற கைதி சுப்பிரமணி, அங்கிருந்த வென்டிலேட்டர் வழியாக தப்பிச் சென்றார். இது தொடர்பாக, கோவை ரேஸ்கோஸ் போலீஸார் வழக்கு பதிவுசெய்து சுப்பிரமணியைத் தேடி வந்தனர்.

கைது
கைது
சித்திரிப்புப் படம்

போக்சோ வழக்கில் சுப்பிரமணி ஆஜராகாமல் இருந்த நிலையில், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சுப்பிரமணியை தேடி வந்த தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸார் கொடுமுடியில் பதுங்கியிருந்த சுப்பிரமணியை செவ்வாய்க்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.