Published:Updated:

வாட்ஸ்அப்பில் வந்த `ஆன்லைன் டிரேடிங்' மெசேஜ்; ரூ.78.6 லட்சம் ஏமாந்த சேலம் இளைஞர்! - என்ன நடந்தது?

ஆன்லைன் மோசடி

சேலம் டாக்டரிடம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட டெல்லி, கேரளாவைச் சேர்ந்த இருவரை சைபர் க்ரைம் போலீஸார் கைதுசெய்தனர்.

வாட்ஸ்அப்பில் வந்த `ஆன்லைன் டிரேடிங்' மெசேஜ்; ரூ.78.6 லட்சம் ஏமாந்த சேலம் இளைஞர்! - என்ன நடந்தது?

சேலம் டாக்டரிடம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட டெல்லி, கேரளாவைச் சேர்ந்த இருவரை சைபர் க்ரைம் போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
ஆன்லைன் மோசடி

சேலம், மல்லுறைச் சேர்ந்தவர் கிருபாகரன். இவர் மருத்துவராகப் பணியாற்றிவருகிறார். சமீபத்தில் இவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் ஒன்று வந்திருக்கிறது. அதில், ஆன்லைன் மூலம் டிரேடிங் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி மருத்துவர் கிருபாகரன் பல தவணைகளாக மெசேஜில் குறிப்பிட்டிருந்த இணையதளத்தில் ரூ.80.5 லட்சம் வரை முதலீடு செய்தார். முதற்கட்டமாக அதில் ரூ.1.9 லட்சம் அவருக்கு லாபம் கிடைத்திருக்கிறது. ஆனால் அதன் பின்னர் எந்தத் தொகையையும் அவரால் பெற முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிருபாகரன், இது குறித்து சேலம் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார். அதில் தன்னிடம் ஏமாற்றப்பட்ட ரூ.78.6 லட்சத்தை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதன் பேரில் வழக்கு பதிவுசெய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது
கைது

விசாரணையில் ஆன்லைன் மூலம் ரூ.38 லட்சம் மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த சைதலவி கூட்டலுங்கல், ரூ.5 லட்சம் மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த சௌரவ் தாகூர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இதில், சைதலவி கூட்டலுங்கல் மீது ஆந்திரா, குஜராத் உட்பட பல மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சேலம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீ அபிநவ் பேசியபோது, "பொதுமக்கள் போலியான செயலிகளையும், குறைந்த விலையில் பொருள்கள் விற்பனை செய்வதாக வரும் போலி விளம்பரங்களையும் நம்பி ஏமாற வேண்டாம். வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறுவதையும், லோன் தருவதாகவும், பான் கார்டு அப்டேட் என செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகளையும் நம்பி, உங்களுடைய விவரம் மற்றும் ஓ.டி.பி-க்களை யாரிடமும் பகிர வேண்டாம். அதே சமயம் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் க்ரைம் போலீஸாருக்குத் தகவல் அளிக்க வேண்டும்" என்றார்.