Published:Updated:

`என் தளபதிக்காக நான் வருவேன்டா..!’ - குடிபோதையில் வீடியோ வெளியிட்டவர்கள் கைது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குடிபோதையில் வீடியோ வெளியிட்ட இருவர்
குடிபோதையில் வீடியோ வெளியிட்ட இருவர்

`சங்கீதமங்கலம் ரோட்டுல இளைய தளபதி ரசிகர் மன்றம் நிற்கும்டா. எங்கள் தளபதிடா. உங்களால என்னடா பண்ண முடியும்?'

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்திருக்கும் அனந்தபுரம், உமையாள்புரம் கிராமங்களைச் சேர்ந்த நண்பர்கள், சரத்குமார் மற்றும் வீரன். விஜய் ரசிகர்களான இவர்கள் இருவரும் மது அருந்திக்கொண்டிருக்கும்போது, நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்றம் அமைப்பது தொடர்பாக ஆலோசித்திருக்கின்றனர். அப்போது, காவல்நிலையத்தில் அனுமதி வாங்குவது தொடர்பான பேச்சு எழுந்திருக்கிறது. அதில், காவல்துறையினரைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

வீரன்
வீரன்

தங்களின் மனம் கவர்ந்த நாயகனின் ஹீரோயிசத்தை தங்களுக்குள் `இறக்கிய’ அவர்கள், காவல்துறையினரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். சரியாக 1 நிமிடம் 38 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில், காலி மது பாட்டில்கள் அருகில் கிடக்கின்றன. வீரன் என்று சொல்லப்படும் நபர்,``விஜய் மன்றம் என் வூட்டுக்குப் பக்கத்துல நான் வைப்பேன். சைமா ரோடு தண்ணீர் டேங்குக்குப் பக்கத்துல நான் வைப்பேன்” என்று தொடங்கி, ஆபாச வார்த்தைகளால் காவல்துறையினரை வசைபாடுகிறார்.

டிரைவர் மீது தாக்குதல்... ஆடு மேய்த்த பெண் எடுத்த வீடியோ! - ஃபேஸ்புக் லைவ்வால் சிக்கிய எஸ்.ஐ-க்கள்

அவரையடுத்து சரத்குமார் என்பவர், ``சங்கீதமங்கலம் ரோட்டுல இளைய தளபதி ரசிகர் மன்றம் நிற்கும்டா. எங்க தளபதிடா. உங்களால என்னடா பண்ண முடியும்?” என்று ஆரம்பித்து, அவரும் ஆபாச வார்த்தைகளால் வசைபாடுகிறார். வீரன் என்பவர் மறுபடியும்,``நாங்க தேர்தலுக்காக வைக்கல. விஜய் என் உயிரு. என் வூட்டுல கம்பம் நட்டு கொடி வெப்பேன். உங்களாக முடிஞ்சத பாத்துக்கங்க” என்கிறார். மீண்டும் சரத்குமார் என்பவர், ``மன்றம் வைப்போம். உமையாள்புரம் கிளை, அனந்தபுரம் ஒன்றியம், அனந்தபுரம் சரத்குமாரு நானு. யாரா இருந்தாலும் வாங்கடா” என்கிறார்.

சரத்குமார் - வீரன்
சரத்குமார் - வீரன்

மீண்டும் பேசும் வீரா, ``அதைத் தடுத்தா, விஜய் ரசிகர்கள் அனைவரும் எனக்கு சப்போர்ட்டுக்கு வரணும். அப்படி இல்லைன்னா... என் உசிரு போயிடும். அன்னைக்கு இதே வீடியோவுல கத்தியால என் கழுத்தை அறுத்துக்கிட்டு நான் செத்துப்போவேன்” என்று கூறும்போது, ``அப்படியே ஃபேஸ்புக்குல போடு மச்சான்” என்ற குரல் பின்னணியில் கேட்கிறது.

சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலானதால், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியம் பாஸ்கர்ராஜ், அனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், வீரன் மற்றும் சரத்குமார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு