Published:Updated:

கும்பகோணம்: ஹெலிகாப்டர் சகோதரர்கள் நிதி நிறுவன வழக்கு; அக்கவுன்டன்ட் இருவர் கைது!

ஹெலிகாப்டர் சகோதர்கள்
ஹெலிகாப்டர் சகோதர்கள்

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ். எம்.ஆர் சுவாமி நாதன் சகோதரர்கள். இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்ட வழக்கில் நிதி நிறுவனத்தில் அக்கவுண்டன்டாக பணி புரிந்த அக்கா,தம்பி இருவரும் வெளியூருக்குத் தப்பிச் செல்லமுயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெலிகாப்டர் சகோதர்கள்
ஹெலிகாப்டர் சகோதர்கள்

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ். எம்.ஆர் சுவாமி நாதன் சகோதரர்கள். இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். தங்களிடம் முதலீடு செய்தால் இரட்டிப்பாகத் திருப்பித் தரப்படும் என ஆசை வார்த்தைகள் கூறி கும்பகோணத்தை சேர்ந்த பலரிடம் நிதி வசூல் செய்தனர். செல்வந்தர்கள், வர்த்தகர்கள், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் என பலரும் கோடிகளில் அவர்களிடம் முதலீடு செய்தனர்.

இந்நிலையில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த தம்பதியான ஜபருல்லா - பைரோஜ்பானு ஹெலிகாப்டர் சகோதரர்கள் தங்களிடம் ரூ 15 கோடி மோசடி செய்து விட்டதாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கடந்த வாரம் போலீஸில் புகார் அளித்தனர். மேலும் அவர்களது சொத்து மற்றும் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் இல்லை என்றால் வெளிநாடு தப்பிச் சென்றுவிடுவார்கள் எனவும் கூறி வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்
பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்

இந்தப் புகாரின் அடிப்படையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மற்றும் அவர்கள் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த சிலர் மீதும் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமைறைவாகிவிட்ட சகோதரர்களைத் தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த ஸ்ரீகாந்த் என்பவரைக் கைது செய்ததுடன் ஹெலிகாப்டர் சகோதரர்கள் வீட்டிலிருந்த 12 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிதி நிறுவனத்தில் அக்கவுண்டன்டாக பணிபுரிந்து தலைமறைவாக இருந்த அக்கா, தம்பியான மீரா, ஸ்ரீராம் ஆகியோரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த மீரா மற்றும் அவருடைய தம்பி ஸ்ரீராம் இருவரும் வெளியூருக்குத் தப்பிச்செல்ல இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கைது செய்யப்பட்ட அக்கா,தம்பி
கைது செய்யப்பட்ட அக்கா,தம்பி

இதனை தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு டி.எஸ்.பி அசோகன் தலைமையிலான போலீஸார் சென்றனர். அங்கு பஸ்ஸில் இருந்த மீரா,ஸ்ரீதர் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு முன்ஜாமீன் அப்பீல் செய்வதற்குச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர். நாளை ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் இருக்காது எனவே உண்மையைக் கூறுங்கள் எனக் கேட்டதற்கு முன்னுக்குப் பின் முரணான தகவலைக் கூறியுள்ளனர்.

இதையடுத்து இருவரையும் கைது செய்ததுடன் மீராவை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், ஸ்ரீதரை கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்கும் கொண்டு சென்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு