Published:Updated:

மரணத்தை தடுக்க பரிகார பூஜை; பழங்குடி பெண்ணிடம் பணம், நகைகளை சுருட்டிய பலே ஆசாமிகள் சிக்கியது எப்படி?

பலே ஆசாமிகள் சிக்கியது எப்படி?

மரணத்தை தடுக்க பரிகாரம் செய்வதாகக் கூறி பழங்குடி பெண்ணிடம் பணம், நகைகளை சுருட்டிக்கொண்டு ஓடிய, இருவரை போலீஸார் கைதுசெய்தனர்.

மரணத்தை தடுக்க பரிகார பூஜை; பழங்குடி பெண்ணிடம் பணம், நகைகளை சுருட்டிய பலே ஆசாமிகள் சிக்கியது எப்படி?

மரணத்தை தடுக்க பரிகாரம் செய்வதாகக் கூறி பழங்குடி பெண்ணிடம் பணம், நகைகளை சுருட்டிக்கொண்டு ஓடிய, இருவரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
பலே ஆசாமிகள் சிக்கியது எப்படி?

நீலகிரி மாவட்டம், கோடநாடு கோடதேன் மந்துவைச் சேர்ந்தவர் பூவாடகுட்டன். இவர் மனைவி ரகுமல்லி. தோடர் பழங்குடியினரான ரகுமல்லியிடம் ஜோசியம் பார்ப்பதாக இருவர் அறிமுகமாகியிருக்கின்றனர். ரகுமல்லியின் குடும்பப் பிரச்னைகளைக் கேட்டிருக்கின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய இளைய மகன் வாகன விபத்தில் இறந்துவிட்டதாகவும், தன்னுடைய மூத்த மகன் கணவருடன் விவசாயம் செய்து வருவதாகவும் தெவித்திருக்கிறார்.

போலி ஜோசியர்கள்
போலி ஜோசியர்கள்

``உங்களுடைய மூத்த மகனும் தற்போது இறக்கும் அபாயத்தில் இருக்கிறார். இதைத் தடுக்க உடனடியாக பரிகார பூஜை செய்ய வேண்டும்" என ஒன்பதாயிரம் ரூபாய் பணத்தை இருவரும் கேட்டிருக்கின்றனர். அதைக்கேட்டு பயந்துபோன ரகுமல்லி, தன்னிடமிருந்த 1,800 ரூபாயைக் கொடுத்திருக்கிறார். மேலும், ரகுமல்லி அணிந்திருந்த தங்க நகைகளை மஞ்சள் தடவிய சிறிய வெள்ளைத் துணியில் பூஜித்து கட்டி கொடுப்பதாகவும், அதை தினமும் பூஜை செய்து வழிபடுமாறும் கூறிவிட்டுச் சென்றிருக்கின்றனர். இவர்கள் கிளம்பியதும் அந்த வெள்ளைத் துணியை அவிழ்த்து பார்த்த ரகுமல்லிக்கு ஏமாற்றம்‌ மட்டுமே மிஞ்சியது... தங்க ஆபரணங்களைக் காணவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, உடனடியாக சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போலீஸார் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், ஈளாடா கிராம பகுதியில் சுற்றித்திரிந்த இருவரை போலீஸார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது ரகுமல்லியிடம் பணம்‌, நகையை அவர்கள் ஏமாற்றியதை உறுதிசெய்தனர். உடனடியாக இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலி ஜோசியர்கள்
போலி ஜோசியர்கள்

இந்த மோசடி குறித்து நம்மிடம் பேசிய காவல்துறையினர், ``ஜோசியர் என்ற பெயரில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ்(34), ஜீவா(34) ஆகிய இருவரும் பரிகாரம் செய்வதாக மோசடி செய்திருக்கின்றனர். இவர்களிடமிருந்து பணம், நகையைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இருவர்மீதும் வழக்கு பதிவுசெய்து கோத்தகிரி மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.