Published:Updated:

சாத்தான்குளம்: மதுபோதையில் தகராறு... தொழிலாளி கொலை வழக்கில் இருவர் சிக்கியது எப்படி?!

சாத்தான்குளம் காவல் நிலையம்

சாத்தான்குளம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

சாத்தான்குளம்: மதுபோதையில் தகராறு... தொழிலாளி கொலை வழக்கில் இருவர் சிக்கியது எப்படி?!

சாத்தான்குளம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

Published:Updated:
சாத்தான்குளம் காவல் நிலையம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், கரையடி சுடலைமாடன் கோயில் அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் ஆணின் உடல் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. அப்பகுதி வழியே சென்றவர்கள் இது குறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கூறியுள்ளனர். விசாரணை நடத்தியதில் சாத்தான்குளம் டு நாசரேத் சாலைத் தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்தது. இவர், சாத்தான்குளத்தில் கதவு, ஜன்னல் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட கண்ணன், தாவீது, டேனிசெல்வம்
கொலை செய்யப்பட்ட கண்ணன், தாவீது, டேனிசெல்வம்

கண்ணனின் மனைவி உடல்நலக் குறைவினால் சில கடந்த ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். கண்ணன், தற்போது தனிமையில் வசித்து வந்துள்ளார். அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்ததில் கண்ணனை இரண்டு பேர் பைக்கில் அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தைச் சேர்ந்த தாவீது, நெல்லை மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்த டேனி செல்வம் ஆகிய இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கண்ணனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். ``அந்த சுடுகாட்டுப் பகுதியில உள்ள கருவேல மரத்துக்கு அடியில உட்காந்துதான் சரக்கு அடிப்பேன். கண்ணன், டேனி செல்வம் ரெண்டு பேரும் அங்கதான் சரக்கு அடிக்க வருவாங்க. ரெகுலரா அந்த இடத்துல நாங்க மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுக்கிறதுனால மூணு பேரும் ஒன்னா சேர்ந்து சரக்கு அடிக்க ஆரம்பிச்சோம்.

எரிந்த நிலையில் கண்ணனின் உடல்
எரிந்த நிலையில் கண்ணனின் உடல்

வழக்கம் போல சரக்கு அடிச்சுட்டு இருந்தோம். போதையில கண்ணன், என்னையும் டேனி செல்வத்தையும் தரக்குறைவாப் பேசினார். நாங்க ரெண்டு பேரும் அவரைக் கண்டிச்சோம். ஆனா, அவரு தகாத வார்த்தையாலப் பேசுறதை நிறுத்தல. ஒரு கட்டத்துல டென்ஷன் அதிகமானதுனால பக்கத்துல கிடந்த கல்லைத் தூக்கி அவரு தலையில போட்டோம்.

கொஞ்ச நேரத்துல இறந்துட்டாரு. அவர் இறப்பாருன்னு நாங்க நினைக்கல. பதற்றத்துல என்ன செய்யுறதுன்னு தெரியாம காய்ஞ்ச முட்செடிக்குள்ள அவரோட உடலை இழுத்துப் போட்டு தீ வச்சுட்டு அங்க இருந்து ரெண்டு பேரும் உடனே கிளம்பிட்டோம்” எனச் சொல்லி போலீஸாரையே அதிரவைத்துள்ளார் தாவீது.

இது தொடர்பாக போலீஸாரிடம் பேசினோம். ``கைதுசெய்யப்பட்டுள்ள இரண்டு பேரில் தாவீது, கடந்த 2021, ஜுலை 7-ம் தேதி சாத்தான்குளம் அருகே உள்ள தஞ்சைநகரத்தைச் சேர்ந்த அருமைக்கொடி என்பவரை குடிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.

கொலைசெய்யப்பட்ட  சுடுகாட்டுப் பகுதி
கொலைசெய்யப்பட்ட சுடுகாட்டுப் பகுதி

குடிபோதை தலைக்கேறிய இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அருமைக்கொடியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். இதற்காக சிறையில் இருந்தவர் ஜாமீனில் வெளி வந்துள்ளார். அந்த வழக்கில் ஆஜராக மாதந்தோறும் நீதிமன்றத்தில் வாய்தாவுக்குச் சென்று வந்துள்ளார். கண்ணனைக் கொலைசெய்த நாளுக்கு ஒருநாள் முன்பாக வாய்தாவிற்கு சென்று வந்துள்ளார். அவர் ஒரு சைக்கோ கொலையாளி. ஒரு சந்தேகத்தில் அவரிடம் விசாரணை நடத்தினோம். அவர்தான் இந்த கொலை வழக்கிலும் கொலையாளி என்பது உறுதியானது” என்றனர்.

இந்தச் சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.