Published:Updated:

வண்ணாரப்பேட்டை: சிறுமிகளைத் திருமணம் செய்த இளைஞர்கள் - போக்சோவில் கைது செய்த போலீஸ்!

சிறுமி
News
சிறுமி

சென்னையில் சிறுமிகளைத் திருமணம் செய்த இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் குடியிருக்கும் 16 வயது சிறுமிக்கும், திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் சிறுமியும் விஜயகுமாரும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், சிறுமி தனியாக வீட்டிலிருந்தபோது அங்கு சென்ற விஜயகுமார், அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதோடு யாருக்கும் தெரியாமல் தாலியும் கட்டியிருக்கிறார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

பின்னர் சிறுமியை விஜயகுமார் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதனால் சிறுமி கர்ப்பமடைந்தார். இதுகுறித்து சிறுமியின் அம்மாவுக்கு தெரியவந்ததும், அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் அம்மா புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். சிறுமி அளித்த தகவலின்படி விஜயகுமாரை போலீஸார் கைது செய்தனர். விஜயகுமார் மீது போக்சோ, குழந்தை திருமண தடைச் சட்டம் ஆகியவை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்னொரு சம்பவம்!

இதேபோல, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் குடியிருக்கும் 16 வயது சிறுமியை திருவொற்றியூரைச் சேர்ந்த அசோக்குமார் (28) என்பவர் காதலித்து வந்திருக்கிறார். பின்னர் சிறுமியை கோயிலுக்கு அழைத்துச் சென்று தாலி கட்டியிருக்கிறார். அதன்பிறகு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதனால் சிறுமி கர்ப்பமடைந்திருக்கிறார்.

கைது
கைது

இதுகுறித்து சிறுமியின் அம்மா திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சிறுமியிடமும் அசோக்குமாரிடமும் விசாரணை நடத்தினர். சிறுமி அளித்த தகவலின்படி அசோக்குமார் மீது போக்சோ, குழந்தை திருமண தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து போக்சோ வழக்கில் கைதான விஜயகுமார், அசோக்குமார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.