Published:Updated:

சென்னை: அதிகாலையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை... இளைஞர்கள் இருவர் கைது! - என்ன நடந்தது?

கைது

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தனியாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: அதிகாலையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை... இளைஞர்கள் இருவர் கைது! - என்ன நடந்தது?

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தனியாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Updated:
கைது

சென்னை, கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றம்). இவரின் கணவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 8-ம் தேதி உமாவின் கணவர் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இரவில் வேலைக்குச் சென்றுவிட்டார். அதனால் உமா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை 3 மணியளவில் உமாவின் வீட்டு கதவை மர்ம நபர்கள் தட்டினர்.

அரவிந்த்
அரவிந்த்

அதனால் கண்விழித்த உமா கதவை திறந்துள்ளார். அப்போது வீட்டின் வாசலில் இரண்டு பேர் நின்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் கத்தி முனையில் உமாவை மிரட்டி அவர் வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர் உமாவிடம் தவறாக நடக்க அவர்கள் இருவரும் முயன்றனர். உமா சத்தம் போட்டார். மேலும் இரண்டு பேருடன் உமா போராடினார். இதையடுத்து இரண்டு பேரும் உமாவை தாக்கியதோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இது குறித்து உமா, தனக்கு நடந்த கொடுமைகளைக் கணவரிடம் கண்ணீர்மல்க தெரிவித்தார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உமாவின் கணவர், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். விசாரணையில் உமாவிடம் தவறாக நடக்க முயன்றது அவரின் வீட்டின் கீழ்தளத்தில் தங்கியிருக்கும் சென்னை பிருந்தாவன்நகரைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்கிற குள்ள பையன் (28), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் (27) எனத் தெரியவந்தது.

கணேசமூர்த்தி
கணேசமூர்த்தி

அவர்கள் இருவரும் தலைமறைவாக இருந்தனர். போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். விசாரணைக்குப்பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர். இருவரிடமும் விசாரித்தபோது உமா, தனியாக இருப்பதைக் கவனித்து அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகத் தெரிவித்தாக போலீஸார் கூறினர். இதையடுத்து இருவரிடமிருந்து கத்தி ஒன்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இருவர்மீதும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.