Published:Updated:

திருவள்ளூர்: `நாங்க திருடலை; வேட்டியை இழந்ததுதான் மிச்சம்!' - சிக்கிய கொள்ளையர்கள் கதறல்

கொள்ளை ( மாதிரிப் படம் )

`திருவள்ளூரில் திருடச் சென்ற இடத்தில் வீட்டில் உள்ளவர்கள் வந்துவிட்டதால், பொருள்களைக் கொள்ளையடிக்காமல் தப்பிச் சென்றோம். அப்போது எங்களில் ஒருவரின் வேட்டியை இழந்தது மட்டும்தான் மிச்சம்’ என்று கண்ணீர்மல்க போலீஸாரிடம் தெரிவித்தனர்.

திருவள்ளூர்: `நாங்க திருடலை; வேட்டியை இழந்ததுதான் மிச்சம்!' - சிக்கிய கொள்ளையர்கள் கதறல்

`திருவள்ளூரில் திருடச் சென்ற இடத்தில் வீட்டில் உள்ளவர்கள் வந்துவிட்டதால், பொருள்களைக் கொள்ளையடிக்காமல் தப்பிச் சென்றோம். அப்போது எங்களில் ஒருவரின் வேட்டியை இழந்தது மட்டும்தான் மிச்சம்’ என்று கண்ணீர்மல்க போலீஸாரிடம் தெரிவித்தனர்.

Published:Updated:
கொள்ளை ( மாதிரிப் படம் )

திருவள்ளூர், கீழ்நல்லாத்தூர் பல்லவன் திருநகர், வித்யா நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கடந்த 18.1.2022-ம் தேதி மணவாளநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் வசித்துவருகிறேன். ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றிவருகிறேன். கடந்த 14.1.2022-ம் தேதி பொங்கலையொட்டி, எனது சொந்த ஊரான செங்கல்பட்டு அருகேயுள்ள பிளாப்பூருக்குக் குடும்பத்தோடு சென்றிருந்தோம்.

முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

பின்னர் 17.1.2022-ம் தேதி மதியம் 1:30 மணிக்கு எனது மனைவி, என்னுடைய அம்மா, மாமனார் ஆகியோர் மட்டும் வீட்டுக்குத் திரும்பிவந்தனர். நான் வேலைக்குச் சென்றுவிட்டேன். வீட்டுக்கு வந்த என்னுடைய மனைவி, அம்மா, மாமனார் ஆகியோர் வீட்டுக்குள் செல்ல முயன்றபோது பூட்டு உடைக்கப்பட்டு வீட்டுக்குள் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டிலிருந்த இரண்டு கிராம் தங்க மூக்குத்தி, 3,00,000 ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டிருந்தனர். உடனே அவர்களை என்னுடைய குடும்பத்தினர் மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது கொள்ளையர்கள் என்னுடைய மாமனார், அம்மாவைத் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர்.

எனவே, தப்பி ஓடிய கொள்ளையர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது இரண்டு கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. ராஜேஷின் வீட்டிலிருந்து கொள்ளையடித்தவர்களில் ஒருவன் அணிந்திருந்த வேட்டி மட்டும் ராஜேஷின் மாமனாரின் கையில் சிக்கிக்கொண்டது.

சிசிடிவி
சிசிடிவி

உள்ளாடையுடன் தப்பிச் சென்ற கொள்ளையர்களை போலீஸார் சிசிடிவி மூலம் அடையாளம் கண்டு, அவர்களைப் பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்களின் பெயர் கிறிஸ்டோபர், பார்த்திபன் எனத் தெரியவந்தது. பார்த்திபன், திருநின்றவூரைச் சேர்ந்தவன். விசாரணையின்போது இருவரும், ``நாங்கள் ராஜேஷின் வீட்டில் எதுவும் திருடவில்லை. திருடச் சென்ற இடத்தில் வேட்டியை மட்டும்தான் இழந்தோம்" என்று கண்ணீர்மல்கக் கூறினர். இதையடுத்து புகாரளித்த ராஜேஷிடம் திருட்டுப்போன பொருள்கள் பற்றி போலீஸார் விசாரித்துவருகின்றனர்.