Published:Updated:

விழுப்புரம்: பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல்; வாலிபர் போக்சோவில் கைது!

பாலியல் தொல்லை ( சித்தரிப்புப் படம் )

பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம்: பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல்; வாலிபர் போக்சோவில் கைது!

பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
பாலியல் தொல்லை ( சித்தரிப்புப் படம் )

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஆல்வின் மெல்கியூர். 25 வயதான இந்த இளைஞர், மைசூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சமையல்காரராக வேலை செய்துவந்திருக்கிறார். ஆல்வின் மெல்கியூர், தான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை, ஆறு மாத காலமாகக் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி ஆல்வின் மெல்கியூர் சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்
விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்

அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், சிறுமியைத் திட்டி, அடித்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த விழுப்புரம் மகளிர் காவல்துறையினர், 20-ம் தேதி மாலை ஆல்வின் மெல்கியூரை போக்சோ வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism