Published:Updated:

``தொழிலதிபரைக் கடத்தச் சொன்னதே பெண் டாக்டர்தான்!" - கைதானவர்களின் `பகீர்’ தகவலால் வழக்கில் திருப்பம்

கடத்தல் ( சித்திரிப்புப் படம் )

சென்னையில் தொழிலதிபர் சரவணன் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக பெண் டாக்டர் அமிர்தாவை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

``தொழிலதிபரைக் கடத்தச் சொன்னதே பெண் டாக்டர்தான்!" - கைதானவர்களின் `பகீர்’ தகவலால் வழக்கில் திருப்பம்

சென்னையில் தொழிலதிபர் சரவணன் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக பெண் டாக்டர் அமிர்தாவை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
கடத்தல் ( சித்திரிப்புப் படம் )

சென்னை, தி.நகர் ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கட்டுமானம், ரியல் எஸ்டேட், மணல் விற்பனை உள்ளிட்ட பிசினஸ்களைச் செய்துவருகிறார். கடந்த 20.8.2022-ம் தேதி வீட்டிலிருந்த சரவணனை அவருக்கு அறிமுகமான ஆரோக்கியராஜ் என்பவர் காரில் கடத்திச் சென்றார். இது தொடர்பாக சரவணனின் அண்ணன் முத்துக்குமார், மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் பாரதிராஜா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் வழக்கு பதிவுசெய்து சிசிடிவி கேமரா, ஜி.பி.எஸ் உதவியோடு சரவணனை சில மணி நேரத்திலேயே மீட்டார். பின்னர் சரவணன் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொகுசு கார்களையும், விலை உயர்ந்த வாட்ச்சுகள், செல்போன்கள் ஆகியவற்றையும் கடத்தல் கும்பலிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்

இந்த வழக்கில் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், அவரின் கூட்டாளிகளான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் குரு, திருப்பூரைச் சேர்ந்த அப்ரோஸ், மதுரையைச் சேர்ந்த அஜய், விஜயபாண்டி, கோவையைச் சேர்ந்த நாகேந்திரன் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். கடத்தலுக்காகப் பயன்படுத்திய சொகுசு கார், பைக், ஏழு செல்போன்கள், லேப்டாப், கத்தி, சுருள் வாள், பொம்மைத் துப்பாக்கி உள்ளிட்டவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``கைதான ஆரோக்கியராஜ் என்பவரும், கடத்தப்பட்ட சரவணனும் சேர்ந்து வீடு கட்டுமானம், ரியல் எஸ்டேட், சவுடு மண் வியாபாரம் உள்ளிட்ட பிசினஸ்களைச் செய்துவந்திருக்கின்றனர். பிசினஸில் ஆரோக்கியராஜுக்கு சரவணன், சில கோடி ரூபாய் கொடுக்க வேண்டியிருந்திருக்கிறது. அந்தப் பணத்தை சரவணன் கொடுக்காமல் இழுத்தடித்துவந்திருக்கிறார். பணத்தைக் கேட்டு ஆரோக்கியராஜ், தன்னுடைய கூட்டாளிகளுடன் சரவணன் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது, சரவணனையும் அவரின் வீட்டிலிருந்து இரண்டு சொகுசு கார்கள், விலை உயர்ந்த பொருள்களையும் ஆரோக்கியராஜ் கும்பல் திருடிக்கொண்டு சென்றிருக்கிறது.

ஆரோக்கியராஜ்
ஆரோக்கியராஜ்

கைதானவர்களிடம் விசாரித்தபோது, `சென்னை தேனாம்பேட்டையில் கிளினிக் நடத்திவரும் தோல் நிபுணர் டாக்டர் அமிர்தா கூறியதன்பேரில்தான் தொழிலதிபர் சரவணனைக் கடத்தினோம்' என்று தெரிவித்தனர். அதனால் கடத்தல் வழக்கு தொடர்பாக டாக்டர் அமிர்தாவிடம் விசாரணை நடத்தினோம். அப்போது சரவணனை ஆரோக்கியராஜ் மூலம் கடத்த டாக்டர் அமிர்தா திட்டமிட்ட தகவல் தெரியவந்தது. இதையடுத்து அமிர்தாவைக் கைதுசெய்திருக்கிறோம். அவரின் செல்போனைப் பறிமுதல் செய்து ஆய்வு நடத்திவருகிறோம். அதில் ஆரோக்கியராஜுக்கு டாக்டர் அமிர்தா கடத்தல் தொடர்பாக சில மெசேஜ்களை அனுப்பிவைத்திருக்கிறார். அந்த அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கில் இன்னும் சிலரைத் தேடிவருகிறோம்" என்றார்கள்.