Published:Updated:

சாத்தூர்: நிதி நிறுவன உரிமையாளரிடம் நூதன முறையில் பண மோசடி! - பெண் கைது

நூதன முறையில் பண மோசடி

நிதி நிறுவன உரிமையாளரிடம் நூதன முறையில் பண மோசடி செய்த இளம்பெண்ணை போலீஸார் கைதுசெய்தனர்.

சாத்தூர்: நிதி நிறுவன உரிமையாளரிடம் நூதன முறையில் பண மோசடி! - பெண் கைது

நிதி நிறுவன உரிமையாளரிடம் நூதன முறையில் பண மோசடி செய்த இளம்பெண்ணை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
நூதன முறையில் பண மோசடி

விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் வைரமுத்து (34). தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கும் கேரள மாநிலம், பாலக்காடு அருகிலுள்ள காரக்காடு பகுதியைச் சேர்ந்த ஃபைனான்ஸ் ஊழியரான பைசல் என்பவருக்கும் இடையே கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாக அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.

தனியார் வங்கிகள் மற்றும் மற்ற நிதி நிறுவனங்களில் அடகிலுள்ள வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை மீட்டு வைரமுத்திடம் மறுஅடகு வைத்துக்கொடுத்து பைசல் பிசினஸ் செய்து வந்திருக்கிறார். இதனால், அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நகை ஃபைனான்ஸ் விஷயமாக விருதுநகர் மாவட்டம், சாத்தூருக்கு பைசல் வந்து சென்றபோது, அவருக்கும் இருக்கன்குடியைச் சேர்ந்த மாரிச்செல்வி (38) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பேசி வந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பைசலும், மாரிச்செல்வியும் சேர்ந்து நிதி நிறுவன அதிபர் வைரமுத்தைச் சந்தித்திருக்கின்றனர். அப்போது, "எங்களுக்குச் சொந்தமான 458 கிராம் தங்க நகை சாத்தூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடகில் இருக்கிறது. அதைமீட்டு உங்களிடமே மறுஅடகு வைக்க 14.50 லட்சம் பண உதவி வேண்டும்" எனக் கேட்டிருக்கின்றனர். இதைநம்பி, நிதி நிறுவன‌ அதிபர் வைரமுத்தும் அவர்கள் கேட்ட ரூ.14.50 லட்சத்தை கொடுத்தனுப்பியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாதுகாப்புக்காக தன்னுடைய காரிலேயே சென்று வருமாறு கூறிய அவர், டிரைவரை அழைத்து பைசலுடன் சென்று வருமாறு கூறியிருக்கிறார். பணத்தை பெற்றுக்கொண்டு காரில் சாத்தூர் வந்திறங்கிய பைசலும், மாரிச்செல்வியும் டிரைவரிடம் தேசியமயமாக்கப்பட்ட வங்கியை கைக்காட்டி பணத்தை கட்டிவிட்டு நகையை மீட்டுவருவதாகக் கூறிச்சென்றிருக்கின்றனர். சிறிதுநேரத்தில் திரும்பிவந்த அவர்கள், `இந்த வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யமுடியவில்லை. அதனால் பக்கத்திலிருக்கும் வேறொரு வங்கி மூலமாக கணக்கில் பணத்தை டெபாசிட் செய்துவிட்டு வருகிறோம்" என கார் டிரைவரிடம் கூறிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

காவல் நிலையம்
காவல் நிலையம்

ஆனால் அதன்பிறகு அவர்கள் திரும்பிவரவில்லை. வெகுநேரமாகியும், இருவரும் திரும்பிவராததால் சந்தேகமடைந்த கார் டிரைவர் இது குறித்து வைரமுத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். பதறிப்போன வைரமுத்து, பைசலுக்கு போன்செய்து பார்த்திருக்கிறார். ஆனால், தொடர்பு கிடைக்காத நிலையில், தான் ஏமாற்றப்பட்டது வைரமுத்துவுக்கு தெரியவந்திருக்கிறது.

மோசடி
மோசடி

இது குறித்து, அவர் சாத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி‌.கேமரா காட்சி பதிவுகள், செல்போன் சிக்னல் ஆகியவற்றை கொண்டு விசாரித்ததில், கார் டிரைவரை ஏமாற்றிவிட்டு பணத்துடன் வாடகைக் காரில் ஏறி பைசலும், மாரிச்செல்வியும் தப்பிச்சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, செல்போன் சிக்னல் ஆதாரங்களை கொண்டு மாரிச்செல்வியை போலீஸார் கைதுசெய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணத்துடன் பைசல், கேரளாவுக்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, பைசலை பிடிக்க தனிப்படையினர் கேரள மாநிலம் விரைந்துள்ளனர்.