Published:Updated:

காதலன் வீட்டில் ரகளை; தடுக்கச் சென்ற போலீஸ் ஏட்டைக் கடித்துவைத்த இளம்பெண் - என்ன நடந்தது?!

காதலன் வீட்டில் ரகளை

காதலன் வீட்டுக்குச் சென்ற இளம்பெண், அங்கிருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டார். அதைத் தடுக்கச் சென்ற போலீஸ் ஏட்டுவின் கையையும் அந்தப் பெண் கடித்தார்.

காதலன் வீட்டில் ரகளை; தடுக்கச் சென்ற போலீஸ் ஏட்டைக் கடித்துவைத்த இளம்பெண் - என்ன நடந்தது?!

காதலன் வீட்டுக்குச் சென்ற இளம்பெண், அங்கிருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டார். அதைத் தடுக்கச் சென்ற போலீஸ் ஏட்டுவின் கையையும் அந்தப் பெண் கடித்தார்.

Published:Updated:
காதலன் வீட்டில் ரகளை

சென்னை, திருவொற்றியூர் 1-வது தெரு, சீனிவாச பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் கடந்த 31.8.2022-ம் தேதி கொடுத்த புகாரில், ``என்னுடைய கணவர் ராஜேந்திரமோகன், திருவொற்றியூர் டோல்கேட்டிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்று, தற்போது வீட்டில் இருக்கிறார். என் கணவரின் மதல் மனைவி சீதாலட்சுமி. அவர் 1990-ம் ஆண்டு இறந்துவிட்டார். ராஜேந்திரமோகனுக்கும் சீதாலட்சுமிக்கும் பிறந்த மகன் ரேவேந்திரகுமார் (37). சீதாலட்சுமி இறந்த பிறகு என்னை 1991-ம் ஆண்டு இரண்டாவதாக ராஜேந்திரமோகன் திருமணம் செய்தார். எங்களுக்கு ஹேமந்த் குமார் என்ற மகன் உள்ளார்.

திருவொற்றியூர்
திருவொற்றியூர்

என்னுடைய கணவரின் மூத்த மகன் ரேவேந்திரகுமார். சென்னை எம்.ஆர்.சி நகரிலுள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்துவருகிறார். அவர் கடந்த 2020-ம் ஆண்டு புதுவண்ணை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்த செல்வியைக் காதலித்துவந்தார். அந்தத் தகவலை ரேவேந்திரகுமார் குடும்பத்தினரிடம் கூறியதும் காதலுக்குச் சம்மதம் தெரிவித்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்து 15.2.2022-ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்திருந்தோம். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினாலும், எங்களிடமே பணம் மற்றும் நகைகள் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டு தொந்தரவு செய்ததாலும் திருமணம் செய்ய யோசித்தோம். இந்தச் சூழலில் நகை, பணம் கொடுக்க நாங்கள் மறுத்ததால் திருமணம் வேண்டாம் என்று செல்வியே தெரிவித்துவிட்டார். அந்த முடிவுக்கு நாங்கள் சம்மதித்தபோதிலும் அப்போதிலிருந்தே செல்வி என் மகனை போனிலும் நேரிலும் அடிக்கடி தொந்தரவு செய்வதோடு, எங்கள் வீட்டுக்கு வந்து பிரச்னை செய்துவந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாங்களும் பிரச்னை வேண்டாம் என்று இருந்த நிலையில், கடந்த வாரம் எங்கள் வீட்டுக்கு வந்து மீண்டும் செல்வி பிரச்னை செய்தார். கடந்த 31.8.2022-ம் தேதி மாலை 6 மணியளவில் நானும், என் கணவர் ராஜேந்திரமோகன், நாத்தனார் பரிமளா ஆகியோரும் வீட்டிலிருந்தபோது அத்துமீறி நுழைந்த செல்வி அசிங்கமாகப் பேசினார். அப்போது ரேவேந்திரகுமார் வீட்டில் இல்லை என்று நான் கூறியதும், `வீட்டுக்குள் மறைத்துவைத்துவிட்டு நாடகம் ஆடுறீங்களா?' என்று என்னுடைய முடியைப் பிடித்து இழுத்து கையால் செல்வி அடித்தார். அதை வீட்டில் உள்ளவர்கள் தடுத்தும் செல்வியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருகட்டத்தில் அவர் வீட்டிலிருந்த பொருள்களை உடைத்து வீட்டிலிருந்த கரண்டியை எடுத்து, `உங்களைக் கொன்றுவிடுவேன்' என்று மிரட்டினார்.

இளம்பெண்ணின் பிடியில் போலீஸ் ஏட்டு
இளம்பெண்ணின் பிடியில் போலீஸ் ஏட்டு

அதனால் நான் 100-க்கு போன் செய்தேன். உடனே திருவொற்றியூர் காவல் நிலையத்திலிருந்து தலைமைக் காவலர் சரவணன், காவலர் ராஜசேகர் ஆகியோர் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வந்து செல்வியைத் தடுக்க முயன்றபோது போலீஸ் என்றும்கூட பார்க்காமல் `நீங்க என்னடா இவங்களுக்கு சப்போர்ட்டா வாறீங்க?’ என்று தலைமைக் காவலர் சரவணனின் சட்டையைப் பிடித்து செல்வி இழுத்தார். அதில் சரவணனின் சட்டை கிழிந்தது. மேலும் அவரின் இடது கையிலும் செல்வி கடித்துவிட்டார். இதையடுத்து மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்து, பெண் போலீஸார் செல்வியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். எனவே எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து எங்களைத் தாக்கியதோடு பொருள்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த செல்விமீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் முகமது இப்ரான் 341, 294 (பி), 448, 427, 323, 332, 506(2) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து செல்வியிடம் விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பிறகு செல்வியை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் செல்வி, ரேவேந்திரகுமார் வீட்டில் தகராறில் ஈடுபட்டதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலாகிவருகிறது.

இது குறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, ``வீடியோ ஆதாரம், ரேணுகா தேவி கொடுத்த புகாரின் அடிப்படையில் செல்வியைக் கைதுசெய்திருக்கிறோம். செல்விக்கு அம்மா, அப்பா இல்லை. ஒரே ஒரு சகோதரி மட்டும் இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் செல்வி, ஆசிரியையாகப் பணியாற்றிவருவதாக விசாரணையின்போது தெரிவித்தார். அதனால் செல்வி எதற்காக இப்படி நடந்துகொண்டார் என்று விசாரித்துக்கொண்டிருக்கிறோம்" என்றனர்.