Published:Updated:

தூத்துக்குடி: மது அருந்தப் பணம் கேட்டு தாயைக் கொல்லமுயன்ற அண்ணன்... கட்டையால் அடித்துக் கொன்ற தம்பி!

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்

மது அருந்த பணம் கேட்டு தாய் கழுத்தை நெரித்துக் கொல்லமுயன்ற அண்ணனை தம்பி கட்டையால் அடித்துக் கொலைசெய்தார்.

தூத்துக்குடி: மது அருந்தப் பணம் கேட்டு தாயைக் கொல்லமுயன்ற அண்ணன்... கட்டையால் அடித்துக் கொன்ற தம்பி!

மது அருந்த பணம் கேட்டு தாய் கழுத்தை நெரித்துக் கொல்லமுயன்ற அண்ணனை தம்பி கட்டையால் அடித்துக் கொலைசெய்தார்.

Published:Updated:
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் மனைவி ஆறுமுகத்தாய். இவர்களுக்குச் செல்லத்துரை, செல்வக்குமார், முத்துச்செல்வம் ஆகிய 3 மகன்கள், ஒரு மகள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கபாண்டி உடல்நலக்குறைவினால் இறந்து விட்டார். அவர் மனைவி ஆறுமுகத்தாய்தான் குடும்பத்தினை கவனித்து வந்திருக்கிறார். இதில் மூத்த மகனான செல்லத்துரை சரியாக வேலைக்குச் செல்லமாலும், மது அருந்தி விட்டு வீட்டிலும், மற்றவர்களிடமும் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.

கொலைசெய்யப்பட்ட செல்லதுரை - முத்துச் செல்வம்
கொலைசெய்யப்பட்ட செல்லதுரை - முத்துச் செல்வம்

செல்லத்துரைமீது அடிதடி, கொலை மிரட்டல் என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையிலிருந்திருக்கின்றன. செல்லத்துரை அடிக்கடி மது அருந்துவதற்குப் பணம் கேட்டு ஆறுமுகத்தாயிடம் தகராறில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தாராம். இந்த நிலையில், வழக்கம்போல செல்லத்துரை மது அருந்த தன் தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால், ஆறுமுகத்தாய் பணம் தரமறுத்து வீட்டாரும். இதனால் கோபமடைந்த செல்லத்துரை, ஆறுமுகத்தாயின் கழுத்தை நெரித்து... அவர் வைத்திருக்கும் பணத்தை எடுத்துத் தருமாறு கேட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூன்றாவது மகனான முத்துச்செல்வம் தன் அண்ணனைத் தடுத்து, வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லியிருக்கிறார். மது போதையிலிருந்த செல்லத்துரை முத்துச்செல்வத்தை தாக்கியது மட்டுமின்றி, ஆறுமுகத்தாயின் கழுத்தை நெரித்திருக்கிறார். இதையடுத்து முத்துச்செல்வம் வெளியில் கிடந்த கட்டையை எடுத்து தன் சகோதரன் செல்லத்துரையை தாக்கி தன் தாயைக் காப்பாற்றியிருக்கிறார்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்

ஆனால், முத்துச்செல்வம் கட்டையால் அடித்ததும் மயங்கி விழுந்த செல்லத்துரை ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் முத்துச்செல்வத்தைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

மது அருந்த பணம் கேட்டு தாய் கழுத்தை நெரித்துக் கொல்லமுயன்ற அண்ணனை தம்பி கட்டையால் அடித்துக் கொலைசெய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism