கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகர்ஜூனன் (30). ஆட்டோ ஓட்டிவருகிறார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா (27) என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்துவந்தனர். ஆனால், இவர்களின் காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
முக்கியமாக, ஷர்மிளாவின் நடத்தையில் நாகர்ஜூனனுக்கு சந்தேகம் வந்துள்ளது. தன் நண்பர் ஒருவருக்கும், ஷர்மிளாவுக்கும் தொடர்பு இருந்ததாகச் சொல்லி சண்டை போட்டுவந்திருக்கிறார்.

இந்த நிலையில், இது தொடர்பாக வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த நாகர்ஜூனன் ஷர்மிளாவைக் குத்திக் கொன்றுவிட்டார். வீட்டைவிட்டு வெளியில் சென்றவர், நண்பர்களுடன் மது அருந்தும்போது `மனைவியைக் கொன்றுவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தொடர்ந்து உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது ஷர்மிளா ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார்,

ஷர்மிளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், நாகர்ஜூனனைக் கைதுசெய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.