Published:Updated:

மாணவி கர்ப்பம்; மருத்துவமனைக்குத் தாலியுடன் வந்த இளைஞர் - போக்சோவில் கைதுசெய்த போலீஸ்!

கைது

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

மாணவி கர்ப்பம்; மருத்துவமனைக்குத் தாலியுடன் வந்த இளைஞர் - போக்சோவில் கைதுசெய்த போலீஸ்!

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (26). திருப்பூர் முருகம்பாளையம், தந்தை பெரியார் நகர்ப் பகுதியிலுள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரியும் கார்த்திக், அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். இவருக்கும், அதே பகுதியில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, நாளடைவில் மாணவியின் வயிறு பெரிதாகிவந்ததால், அவர் பாட்டிக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து, மாணவியை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, அவர் மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

மாணவி கர்ப்பம்
மாணவி கர்ப்பம்
சித்திரிப்புப் படம்

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பாட்டி, வயிற்றிலுள்ள கருவைக் கலைத்துவிடுமாறு மருத்துவரிடம் தெரிவித்திருக்கிறார். இதையறிந்து கார்த்திக், மாணவியைத் திருமணம் செய்ய தாலி வாங்கிக்கொண்டு, குடும்பத்துடன் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்திருக்கிறார்.

கைது
கைது

இது குறித்து மருத்துவர்கள் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்று விசாரணை மேற்கொண்ட போலீஸார், மாணவியை கர்ப்பமாக்கிய, கார்த்திக்கை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.