Published:Updated:

ஏழு ஆண்டுகளாக கஞ்சா கும்பலிடம் சிக்கிய சிறுமி - கூட்டுப் பாலியல் வழக்கில் கைதான இளைஞர்கள்!

பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

சிறுமியை கஞ்சா போதைக்கு அடிமையாக்கிய கும்பல், அவளை கூட்டாகப் பாலியல் வன்கொடுமைசெய்த சம்பவம் சென்னை சேலையூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏழு ஆண்டுகளாக கஞ்சா கும்பலிடம் சிக்கிய சிறுமி - கூட்டுப் பாலியல் வழக்கில் கைதான இளைஞர்கள்!

சிறுமியை கஞ்சா போதைக்கு அடிமையாக்கிய கும்பல், அவளை கூட்டாகப் பாலியல் வன்கொடுமைசெய்த சம்பவம் சென்னை சேலையூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

சென்னையை அடுத்த சேலையூர், வேங்கைவாசல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி, சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் உட்பட ஏழு பேரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கி, கஞ்சா, வெடிகுண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களிடம் விசாரித்தபோது இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியானது.

கஞ்சா
கஞ்சா

இது குறித்து நம்மிடம் பேசிய சேலையூர் தனிப்படை போலீஸார், ``கஞ்சாவைக் கடத்திய வழக்கில் விஸ்வநாதன், பாரதி, ஹரிபிரசாத், யுவராஜ், மணிகண்டன் உட்பட ஏழு பேரைக் கைதுசெய்தோம். இந்த வழக்கில் பாரதியிடமிருந்து நாட்டு துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டன. மணிகண்டன்மீது கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உட்பட 4 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஹரி பிரசாத், யுவராஜ் ஆகியோர்மீது கொலை முயற்சி வழக்குகுள் இருக்கின்றன. நாகராஜ்மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகள் இருக்கின்றன. ஹரிபிரசாத் என்பவரிடமிருந்து 30 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் அனைவரும் நண்பர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவர்களிடம் கஞ்சா சப்ளை தொடர்பாக விசாரித்தபோது, சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் அவரின் காதலனுக்கும் கஞ்சா சப்ளை செய்ததாகவும், பின்னர் கஞ்சா போதைக்கு அடிமையான சிறுமியை கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் உளறினர். இதையடுத்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமைசெய்த சம்பவம் தொடர்பாக விசாரித்தோம். அப்போது விஸ்வநாதன், பாரதி, மணிகண்டன், சிறுமியின் காதலன், இன்னொருவர் என 5 பேர் சேர்ந்து கூட்டாகப் பாலியல் வன்கொடுமைசெய்தது தெரியவந்தது. இதில் சிறுமியின் காதலன், இன்னொருவர் தலைமறைவாக இருக்கின்றனர். மற்ற மூன்று பேர் அளித்த தகவலின்படி சேலையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றோம்.

சிறுமி வன்கொடுமை
சிறுமி வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

அங்கு 17 வயது சிறுமி ஒருவர் கஞ்சா போதையில் இருந்தார். அவரை மீட்டு சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். அவரிடம் மகளிர் போலீஸார் விசாரித்தபோது, `எனக்கு பத்து வயது இருக்கும் போது மாமா உறவுமுறைகொண்ட ஒருவர் என்னை வீட்டிலிருந்து அழைத்து வந்து சேலையூர் பகுதியில் தங்கவைத்தார். என்னுடைய மாமா கஞ்சா போதைக்கு அடிமையானவர். அதனால் அவருக்கு வாடிக்கையாக கஞ்சா விற்ற விஸ்வநாதன், பாரதி, மணிகண்டன் ஆகியோர் அடிக்கடி வீட்டுக்கு வருவார்கள். ஒரு நாள் அவர்களும் போதையில் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் அது தொடர்கதையாகிவிட்டது' என்று கண்ணீர்மல்க தெரிவித்தார்.

இதையடுத்து சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை, கவுன்சலிங் அளிக்கப்பட்டு அவரின் அம்மாவிடம் ஒப்படைத்தோம். அவரின் அம்மா சென்னையில் வசித்து வருகிறார். சிறுமியின் அம்மாவிடம் விசாரித்தபோது, `ஏற்கெனவே என்னுடைய மகளை மீட்க காவல்துறையில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால்தான் என் மகளின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிட்டது' என்று தெரிவித்தார். சிறுமியை கூட்டாகப் பாலியல் வன்கொடுமைசெய்த வழக்கில் விஸ்வநாதன், மணிகண்டன், பாரதி ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்திருக்கிறோம்.

நாட்டு துப்பாக்கி, வெடிகுண்டு
நாட்டு துப்பாக்கி, வெடிகுண்டு

சிறுமியின் மாமா உட்பட இரண்டு பேரை தேடிவருகிறோம். சிறுமிக்கு பத்து வயது இருக்கும்போது அவள் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார். தற்போது அவளுக்கு 17 வயதாகுகிறது. அதனால் கடந்த ஏழு ஆண்டுகளாக சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. சிறுமியின் காதலன் சிக்கிய பிறகுதான் முழு விவரங்கள் தெரியவரும்" என்றனர்.