Published:Updated:

இன்ஸ்டா லிங்க்; இன்வெஸ்ட்மென்ட் ஆசை - மோசடிக் கும்பலிடம் லட்சங்களைப் பறிகொடுத்த தேயிலைத் தொழிலதிபர்!

மோசடியில் ஈடுபட்ட நபர்கள்

முதலீடு செய்தால் இரட்டிப்பாகத் திருப்பிக் கிடைக்கும் என போலியாக விளம்பரம் செய்து, தேயிலைத் தொழிலதிபரிடம் ரூ.92 லட்சத்தை ஏமாற்றிய கும்பல் கைதுசெய்யப்பட்டது.

இன்ஸ்டா லிங்க்; இன்வெஸ்ட்மென்ட் ஆசை - மோசடிக் கும்பலிடம் லட்சங்களைப் பறிகொடுத்த தேயிலைத் தொழிலதிபர்!

முதலீடு செய்தால் இரட்டிப்பாகத் திருப்பிக் கிடைக்கும் என போலியாக விளம்பரம் செய்து, தேயிலைத் தொழிலதிபரிடம் ரூ.92 லட்சத்தை ஏமாற்றிய கும்பல் கைதுசெய்யப்பட்டது.

Published:Updated:
மோசடியில் ஈடுபட்ட நபர்கள்

நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த தேயிலைத்தூள் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் லிங்க் ஒன்று வந்திருக்கிறது. அந்த லிங்க்கில் இருக்கும் கேள்விகளுக்கு பதிலளித்து முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என்ற கவர்ச்சி விளம்பரம் அதில் இருந்திருக்கிறது. இதை நம்பிய அந்தத் தொழிலதிபர் முதலில் 100 ரூபாயை முதலீடு செய்திருக்கிறார். அது 200 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதில் மயங்கிய அந்தத் தொழிலதிபர் ஆயிரம், லட்சம் என முதலீட்டுத் தொகையை தொடர்ந்து அனுப்பிவந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தனது முதலீட்டுத் தொகையை இரட்டிப்பாக அனுப்பிவைக்குமாறு குன்னூர் தொழிலதிபர் கேட்டிருக்கிறார். ஆனால் எதிர்த் தரப்பிலிருந்து மழுப்பலான பதிலே தொடர்ந்து வந்திருக்கிறது. மேலும் முதலீடு செய்யச் சொல்லி வந்திருக்கின்றனர்.

அதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்தத் தொழிலதிபர் நீலகிரி சைபர் குற்றத் தடுப்புப்பிரிவில் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரைக் கைதுசெய்து தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மோசடி
மோசடி

இந்த மோசடிக் கும்பல் குறித்து தெரிவித்த நீலகிரி சைபர் க்ரைம் போலீஸார், ``இன்ஸ்டாகிராமில் லிங்க் அனுப்பி பண மோசடி செய்திருக்கும் இந்தக் கும்பல் பல இடங்களில் நாடு முழுவதும் பெரிய நெட்வொர்க்காக இயங்கிவந்திருக்கிறது. குன்னூர் தொழிலதிபரிடம் 92.77 லட்சம் ரூபாயை மோசடி செய்திருக்கின்றனர். தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் சேலம் இளம்பிள்ளை பெருமாள் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த எழில் ராஜா, தென்காசி கடையநல்லூர் தலைவன்கோட்டையைச் சேர்ந்த முத்துராஜ், தென்காசி மாவட்டம், வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஆகிய மூன்று பேரை விசாரித்தோம். ஆன்லைன் மோசடி முகவர்களாக இவர்கள் செயல்பட்டதை உறுதிசெய்தோம். இந்த மோசடிக் கும்பலுக்குத் தலைவராகச் செயல்பட்டுவந்த நபர் வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட மூவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து, அவர்களைச் சிறையில் அடைத்தோம். இவர்களிடம் மேலும் விசாரித்து கூடுதல் தகவல்களைப் பெறவிருக்கிறோம்" என்றனர்.