Published:Updated:

ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி... முன்னாள் ஊழியர் உட்பட மூவர் கைது!

கைதுசெய்யப்பட்ட கார்த்திக், தீபன், சிவகுமார்
News
கைதுசெய்யப்பட்ட கார்த்திக், தீபன், சிவகுமார்

ஜவுளிக்கடை உரிமையாளரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு பணத்தை பறித்துச் சென்றவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:

ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி... முன்னாள் ஊழியர் உட்பட மூவர் கைது!

ஜவுளிக்கடை உரிமையாளரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு பணத்தை பறித்துச் சென்றவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட கார்த்திக், தீபன், சிவகுமார்
News
கைதுசெய்யப்பட்ட கார்த்திக், தீபன், சிவகுமார்

ஈரோடு, கருங்கல்பாளையம், கே.ஏ.எஸ் நகரைச் சேர்ந்தவர் சுகைல் அகமது (24). இவர் ஈரோடு, கருங்கல்பாளையத்தை அடுத்த டி.வி.எஸ் வீதியில் சொந்தமாக ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடை வியாபாரத்தை முடித்துவிட்டு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் இரவில் வீடு திரும்புவது வழக்கம். செவ்வாய்க்கிழமை  இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வியாபார பணம் ரூ.5 லட்சத்துடன் கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், சுகைல் அகமதை மறித்து வண்டியிலிருந்து கீழே தள்ளி விட்டனர். அதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சுகைலிடமிருந்து பணம் ரூ.5 லட்சத்தை பறித்துக் கொண்டு அந்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுகைல் அந்த நபரை பிடிக்குமாறு கூச்சலிட்டார். இரவு நேரம் என்பதால் உடனடியாக யாரும் அங்கு வரவில்லை. இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸில் சுகைல் அகமது புகாரளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ராஜாபிரபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். வழிப்பறி நடைபெற்ற பகுதியிலுள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு (சிசிடிவி) கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில், இந்த வழிப்பறி வழக்கில் 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதில் மரப்பாலம், காரைவாய்க்கால் ரோட்டைச் சேர்ந்த டிரைவர் கார்த்திக் (24), கள்ளுக்கடை மேடு- ஈ.வி.ஆர். வீதியைச் சேர்ந்த தள்ளுவண்டி வியாபாரி தீபன் (21), ரங்கம்பாளையம் இரணியன் வீதியைச் சேர்ந்த டிரைவர் சிவகுமார்(36) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

ஈரோடு
ஈரோடு

விசாரணையில் கார்த்திக், சுகைல்அகமதின் ஜவுளிக் கடையில் பணிபுரிந்து வந்தவர் என்பதும், சில காரணங்களால் ஜவுளிக் கடை வேலையிருந்து நின்றுவிட்டதும் தெரியவந்தது. எனினும் கடையின் வரவு செலவு, பணப்புழக்கங்கள் குறித்து கார்த்திக் நன்கு அறிந்து வைத்திருந்தார். அவர் அளித்த யோசனையின் பேரில் கார்த்திக் நண்பர்களுடன் சேர்ந்து பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்த சுகைல் அகமதை தாக்கி ரூ.5 லட்சத்தை பறித்து சென்றதும் கார்த்திக்தான் என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து ரூ.3.80 லட்சம் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழிப்பறி வழக்கில் மேலும் இருவருக்கு தொடர்பு உள்ளதால் அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால்தான் மீதி பணத்தை பறிமுதல் செய்ய முடியும் என போலீஸார் தெரிவித்தனர்.