Published:Updated:

சென்னை: 2,000 புத்தகங்கள், 50 மின் விசிறிகள்... மகளிர் கல்லூரியில் கைவரிசை காட்டிய இளைஞர்கள் கைது!

திருடப்பட்ட புத்தகங்கள்

சென்னை, பிராட்வே பகுதியிலுள்ள மகளிர் கல்லூரியில் மின்விசிறிகள் மற்றும் புத்தகங்களைத் திருடியவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை: 2,000 புத்தகங்கள், 50 மின் விசிறிகள்... மகளிர் கல்லூரியில் கைவரிசை காட்டிய இளைஞர்கள் கைது!

சென்னை, பிராட்வே பகுதியிலுள்ள மகளிர் கல்லூரியில் மின்விசிறிகள் மற்றும் புத்தகங்களைத் திருடியவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
திருடப்பட்ட புத்தகங்கள்

சென்னை, பிராட்வே பகுதியில் மகளிர் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இந்தக் கல்லூரியில் 50 மின்விசிறிகள், மூன்று மின் மோட்டார்கள், எல்.இ.டி புரொஜெக்டர், 2,000 புத்தகங்கள் உள்ளிட்டவை அண்மையில் திருட்டுப்போயின. இது தொடர்பாக கல்லூரியின் முதல்வர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வுசெய்தனர்.

வினோத்குமார்
வினோத்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது திருட்டுச் சம்பவத்தில் பிராட்வே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், தீபன், வெங்கடேசன், வீரமணி, பாபு, சூரி ஆகிய ஆறு பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் பிடித்து விசாரித்தனர். மேலும் திருடிய பொருள்களை அவர்களிடமிருந்து கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ராமநாதன், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாஸ்கர் ஆகியோர் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து எட்டுப் பேரையும் போலீஸார் கைதுசெய்து அவர்களிடமிருந்து இருபது மின்விசிறிகள், மூன்று மின் மோட்டார்கள், ஒரு எல்.இ.டி புரொஜெக்டர், இரண்டாயிரம் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதுசெய்யப்பட்ட வினோத்குமார், தீபன் ஆகியோர் முத்தியால்பேட்டை காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள். கைதான எட்டுப் பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.