Published:Updated:

சென்னை: சாலையில் நடந்துச் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை - பெயின்டர் சிக்கியது எப்படி?

கைதான பெயின்டர் அஜய்

சாலையில் நடந்துச் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக பெயின்டர் அஜய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை: சாலையில் நடந்துச் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை - பெயின்டர் சிக்கியது எப்படி?

சாலையில் நடந்துச் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக பெயின்டர் அஜய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Published:Updated:
கைதான பெயின்டர் அஜய்

சென்னை மடிப்பாக்கத்தை அடுத்த கீழ்கட்டளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், ``நான், சாலையில் நடந்து சென்றபோது பைக்கில் என்னைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், எனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தார்'' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா-க்களை ஆய்வு செய்தனர்.

பெயின்டர் அஜித்குமார்
பெயின்டர் அஜித்குமார்

அப்போது பைக்கில் வரும் இளைஞர், அவ்வழியாக நடந்துச் செல்லும் பெண்ணின் பின்பக்கத்தை கையால் தட்டும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த இளம்பெண் சுதாரித்துக் கொண்டபோது பைக்கில் வந்த இளைஞர் மின்னல் வேகத்தில் தப்பிச் செல்கிறார். இதையடுத்து, பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் சென்னை மடிப்பாக்கம் மூவரசம்பேட்டை ராகவா நகர் 11வது பிரதான சாலையை சேர்ந்த 22-வயதான அஜித்குமாரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் பெண்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அஜித்தைக் கைது செய்த போலீஸார், அவரை சிறையில் அடைத்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கைதான அஜித்குமார், பெயின்டராக வேலை செய்து வருகிறார். கடந்த பத்து நாள்களாக சென்னை மடிப்பாக்கம், கீழ்கட்டளை, வேளச்சேரி, பழவந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது தெரியவந்தது. வீட்டில் அஜித்குமாருக்கு திருமணம் செய்து வைக்காத விரக்த்தியில் இணையதளத்தில் ஆபாச வீடியோஸ்களை அஜித்குமார் பார்த்து வந்துள்ளார். அதன்பிறகுதான் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் பெண்களிடம் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பைக்கில் அஜித்குமார்
பைக்கில் அஜித்குமார்

கைதான அஜித்குமார் மீது கடந்த 2018-ம் ஆண்டு மணிகண்டன் என்ற இளைஞரை கொலை செய்த வழக்கு உள்ளது. அந்த வழக்கில் கைதான அஜித்குமாரை போலீஸார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து வெளியில் வந்த அஜித்குமார், சாலையில் நடந்துச் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக ஏற்கெனவே பழவந்தாங்கல் வேளச்சேரி ஆகிய காவல் நிலையங்களில் புகார்கள் உள்ளன. இந்தநிலையில்தான் அஜித்குமார் தற்போது சிக்கிக் கொண்டார்' என்றனர்.