Published:Updated:

முன்விரோதம்... முற்றிய வாக்குவாதம்... கோயில் திருவிழாவில் இளைஞர் குத்திக் கொலை! - நடந்தது என்ன?

கொலை

திருவிழாவின்போது முன்விரோதத்தின் காரணமாக நடந்த கொலைச் சம்பவம் ஒன்று அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்விரோதம்... முற்றிய வாக்குவாதம்... கோயில் திருவிழாவில் இளைஞர் குத்திக் கொலை! - நடந்தது என்ன?

திருவிழாவின்போது முன்விரோதத்தின் காரணமாக நடந்த கொலைச் சம்பவம் ஒன்று அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட காமக்காப்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில் திருவிழா நடந்துவருகிறது. இந்த நிலையில், திருவிழாவின்போது முன்விரோதத்தின் காரணமாக நடந்த கொலைச் சம்பவம் ஒன்று அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காமக்காபட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ் (23) என்பவருக்கும் இடையே ஓராண்டுக்கு முன்பாக மீன் வியாபாரம் செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கோயில் திருவிழாவில் நண்பர்களுடன் மது அருந்திய தனுஷ் ஏற்கெனவே நடந்த தகராறு குறித்துப் பேசியுள்ளார். மேலும், போதை தலைக்கு ஏறியதைத் தொடர்ந்து திருவிழாவில் கலந்துகொண்ட விக்னேஷிடம் சென்று தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் தள்ளு முள்ளானபோது தனுஷ், தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் விக்னேஷைச் சரமாரியாகக் குத்தியிருக்கிறார். இதில் விக்னேஷின் உடலில் வயிறு உட்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அப்போது விக்னேஷை தனுஷ் கத்தியால் குத்தியபோது தடுக்க வந்த அவர் சகோதரர் தீபன் என்பவரையும் கத்தியால் குத்தித் தாக்கியதால் தீபனும் காயமடைந்தார்.

விக்னேஷ்
விக்னேஷ்

இந்த நிலையில், அங்கு கூடியிருந்தவர்கள் கத்திக் குத்தில் படுகாயமடைந்த விக்னேஷை அருகே உள்ள வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்ததால், முதலுதவிக்குப் பிறகு உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே விக்னேஷ் பலியானார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தனுஷ்
தனுஷ்

தகவலறிந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் நிகழ்விடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் தேவதானப்பட்டி காவல்துறையினர் விரைந்து சென்று விக்னேஷைக் கத்தியால் குத்திய தனுஷ் என்பவரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கோயில் திருவிழாவில் மது போதையில் கத்தியால் குத்தி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism