Published:Updated:

சென்னை: நண்பனின் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்க திட்டம்! - வெடிகுண்டுகளுடன் சிக்கிய ரௌடிக் கும்பல்

ரௌடிக் கும்பல்

சென்னையில் நண்பனைக் கொலைசெய்தவர்களை பழிக்குப் பழியாகக் கொலைசெய்ய திட்டமிட்ட ரௌடிக் கும்பல், நாட்டு வெடிகுண்டுகளுடன் சிக்கியிருக்கிறது.

சென்னை: நண்பனின் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்க திட்டம்! - வெடிகுண்டுகளுடன் சிக்கிய ரௌடிக் கும்பல்

சென்னையில் நண்பனைக் கொலைசெய்தவர்களை பழிக்குப் பழியாகக் கொலைசெய்ய திட்டமிட்ட ரௌடிக் கும்பல், நாட்டு வெடிகுண்டுகளுடன் சிக்கியிருக்கிறது.

Published:Updated:
ரௌடிக் கும்பல்

சென்னை நுங்கம்பாக்கம், டேங்க் பன்ட் ரோடு பகுதியில் சிலர் கத்திகளுடன் இருப்பதாக நுங்கம்பாக்கம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸார் அங்கு சென்றனர். அப்போது போலீஸாரைத் தகாத வார்த்தைகளால் பேசிய சிலர், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை கத்தியால் குத்த முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீஸார் சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றனர். ஆனால், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. இது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின்பேரில் கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

முகமது
முகமது

இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தியதில், போலீஸாரைத் தாக்க முயன்ற கும்பல், போரூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று அவர்களைச் சுற்றிவளைத்தனர். அப்போது அந்த வீட்டிலிருந்த இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். மூன்று பேர் மட்டும் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டனர். விசாரணையில், அவர்களின் பெயர் தினேஷ் என்கிற பீடி தினேஷ், முகமது அஜீம், அருள் ஃபிரான்சிஸ் எனத் தெரியவந்தது. இதில் பீடி தினேஷ், நுங்கம்பாக்கத்திலும், முகமது அஜீம் போரூர் பகுதியிலும், அருள் ஃபிரான்சிஸ் சைதாப்பேட்டையிலும் வசித்துவருவது தெரிந்தது.

தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது கடந்த 16.8.2022-ம் தேதி தினேஷின் நண்பரான குமார் என்கிற குள்ள குமார் என்பவர், நுங்கம்பாக்கத்தில் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான தனசேகர் என்கிற சாம்பார் ராஜா, பார்த்திபனை நுங்கம்பாக்கம் போலீஸார் கைதுசெய்தனர். கைதான தனசேகரும் பார்த்திபனும் ஜாமீனில் வெளியில் வந்திருக்கின்றனர். அதனால் நண்பனின் கொலைக்குப் பழிவாங்குவதற்குத் திட்டமிட்ட தினேஷ், தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து தனசேகர், பார்த்திபனைக் கொலைசெய்ய முடிவுசெய்தார். இதற்காக நாட்டு வெடிகுண்டுகள், கத்திகள் ஆகியவற்றை போரூர் வீட்டில் பதுக்கிவைத்திருந்தனர். ஆனால், கொலைத் திட்டம் குறித்த தகவல் போலீஸாருக்குத் தெரியவந்ததால் அதை முறியடித்தனர். மேலும், கைதானவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகள், கத்திகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த நுங்கம்பாக்கம் போலீஸார், கைதான மூன்று பேர் மீதும் வெடிபொருள் தடைச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அருள் ஃபிரான்சிஸ்
அருள் ஃபிரான்சிஸ்

இது குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் கூறுகையில் ``கைதான தினேஷ் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி. இவர்மீது கஞ்சா, வழிப்பறி உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. முகமது அஜீம் மீது கஞ்சா வழக்கு நிலுவையில் இருக்கிறது. தலைமறைவானவர்களை தேடிவருகிறோம். இவர்கள் கைதுசெய்யப்பட்டதால் கொலைத் திட்டம் முறியடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ரௌடிக் கும்பலுக்கு எப்படி நாட்டு வெடிகுண்டுகள் கிடைத்தன என்று விசாரித்துவருகிறோம்" என்றனர்.