Published:Updated:

சொத்துத் தகராறில் விழுப்புரம் தி.மு.க பிரமுகர் கொலை! -10 மணிநேரத்தில் கொலையாளிகளை வளைத்த போலீஸ்

 தி.மு.க பிரமுகர் பாலாஜி
தி.மு.க பிரமுகர் பாலாஜி

சொத்துத் தகராறில் விழுப்புரத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் பூந்தோட்டம் மேல்வன்னியர் தெருவைச் சேர்ந்த மணி என்பவரது மகன் பாலாஜி (38). இவருக்கு 2 மனைவிகளும், 2 மகன்களும் இருக்கிறார்கள். வழுதரெட்டி பகுதியில் தனது சகோதரருடன் சேர்ந்து லாரிகளுக்கு பாடி கட்டும் வொர்க்‌ஷாப் நடத்தி வந்த பாலாஜி, ரியல் எஸ்டேட் புரோக்கராகவும், விழுப்புரம் நகராட்சியின் 23-வது வார்டு தி.மு.க செயலாளராகவும் இருந்து வந்திருக்கிறார். எப்போதும் மாலையில் வீட்டுக்கு வரும் கணவர் பாலாஜி நேற்று முன் தினம் வராததால் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார் மனைவி ரேகா. பலமுறை அழைத்தும் அவர் எடுக்காததால், தனது உறவினர்கள் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

கொலை
கொலை

இந்நிலையில்தான் அன்றைய தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு விழுப்புரத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஊழியர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவின் சந்திப்பின் அருகில் இருசக்கர வாகனம் ஒன்று சாலையோரத்தில் தனியாக இருப்பதைக் கண்டனர். அதில் சந்தேகமடைந்த அவர்கள் அருகே சென்று பார்த்தனர். அப்போது அங்கு தேங்கியிருந்த மழை நீரில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த, அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.உடனே அங்கு விரைந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தினர் அந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜன்னல் வழியே டார்ச் வெளிச்சம்... திசை மாறும் கேமரா!- சென்னைவாசிகளை அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்

இதனைத்தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டது பாலாஜி என்பது உறுதி செய்யப்பட்டது. பாலாஜியின் மனைவிகள் ரேகா, கற்பகம் மற்றும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அப்போது பாலாஜிக்கும் அவரது தாய் மாமனின் மகன் ராஜா என்பவருக்கு சொத்துப் பஞ்சாயத்து விவகாரத்தில் முன் விரோதம் இருந்தது என்று தெரிவித்தார். உடனே உஷாரான காவல்துறை ராஜாவை சுற்றிவளைக்க கொலைக்கான காரணம் வெளிச்சத்துக்கு வந்தது.

கொலை
கொலை

சின்னசேலத்தில் இருக்கும் பாலாஜியின் தாய்மாமன் பன்னீர்செல்வத்துக்கு ராஜா, இளையராஜா என 2 மகன்களும், சுதா என்ற மகளும் இருக்கிறார்கள். சுதாவுக்கு திருமணமாகிவிட்ட நிலையில் அவரது கணவருக்குச் சொந்தமான 1.5 கோடி ரூபாய் சொத்தை விற்றுள்ளனர். அந்த விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையில் தனது மச்சான்கள் ராஜா, இளையராஜாவுடன் இணைந்து சுதாவின் கணவருக்கு ஆதரவாக எதிர்தரப்பினருடன் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார் பாலாஜி. ஒரு கட்டத்தில் ராஜாவை கழற்றிவிட்டுவிட்டு இளையராஜாவுடன் இணைந்துகொண்டிருக்கிறார் பாலாஜி.

`விபத்து என வந்தார்.. கொலை வழக்கில் சிக்கினார்!' -போதை கணவனின் செயலால் மனைவி எடுத்த விபரீத முடிவு

அதில் கடுப்பான ராஜா, ``நீ தேவையில்லாமல் என்னை கழற்றி விட்டுவிட்டு என் மச்சான் ரமேஷ்கிட்ட பணத்தை கறக்க பாக்குற. என் தம்பி இளையராஜாகூட சேர்ந்துக்கிட்டு நீ கேம் ஆடுறியா? நம்பிக்கைத் துரோகம் பண்ண உன்னை உயிரோடு விடக்கூடாது. உன்னை போட்டுத்தள்ளாம விடமாட்டேன்” என்று பாலாஜியின் ஒர்க்‌ஷாப்பிற்கே சென்று எச்சரித்திருக்கிறார். அதனை பெரிதாகக் கண்டுகொள்ளாத பாலாஜி வழக்கம் போல தனது பணிகளை செய்து வந்திருக்கிறார். ஆனால், பாலாஜியை கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிட்ட ராஜா அதற்காக தன் நண்பர்களிடம் உதவி கேட்டிருக்கிறார். அவர்களும் ஒப்புக்கொண்ட நிலையில், தினமும் பாலாஜி வீட்டுக்குச் செல்லும் போது அவரை பின் தொடர்ந்து, எங்கு வைத்து அவரை எப்படி கொலை செய்யலாம் என்று திட்டம் தீட்டியிருக்கின்றனர். அதன்படி ஆவின் சந்திப்புதான் வளைவாகவும், புதர்கள் மண்டிய பகுதி என்பதால் அந்த இடத்தைத் தேர்வு செய்து, சம்பவத்தன்று கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு முன்கூட்டியே தயார் நிலையில் இருந்திருக்கின்றனர்.

பாலாஜி கொலையில் கைதானவர்கள்
பாலாஜி கொலையில் கைதானவர்கள்

இவர்கள் நினைத்ததுபோல அங்கு வந்த பாலாஜியை வழிமறித்து தாக்கி, அவரது கை கால்களைப் பிடித்துக்கொண்டு அவரது கழுத்தை கொடூரமாக அறுத்துக் கொலை செய்திருக்கின்றனர். பின்னர் பாலாஜி இறந்துவிட்டதை உறுதி செய்தவர்கள், அவரது உடலை சாலையோரமாக இருந்த மழைநீர் தேங்கிய பள்ளத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். ராஜா கொடுத்த இந்தத் தகவலின் அடிப்படையில் அவரது நண்பர்கள் பெரும்பாக்கம் விஜயகுமார் (25), மண்ணர்மன்னன் (48), கொண்டங்கி தினேஷ் (26), தோகைப்பாடி அய்யனார் (35), பெரும்பாக்கம் மகேஷ் (23), கொலைக்கு உடந்தையாக இருந்த சின்னசேலத்தை சேர்ந்த சண்முகம் (46) உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தது காவல்துறை. கொலை நடந்த 10 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அதிரடியாகக் கைது செய்த விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

அடுத்த கட்டுரைக்கு