Published:Updated:

மதுரை டோல்கேட் ஊழியர்களை துப்பாக்கியால் மிரட்டிய ரவுடிகள்! - உசிலம்பட்டி அருகே கைது

செ.சல்மான் பாரிஸ்
வி.சதிஷ்குமார்

விசாரித்ததில் துப்பாக்கியால் சுட்டவர் திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பது தெரிந்தது

கப்பலூர் டோல்கேட்
கப்பலூர் டோல்கேட்

மதுரை மாட்டம் திருமங்கலம் அருகில் கப்பலூரில் டோல்கேட் அமைந்துள்ளது. இன்று அந்த வழியாக வந்த காரை நிறுத்தி கட்டணம் கேட்டிருக்கிறார்கள் ஊழியர்கள்

கப்பலூர் டோல்கேட்
கப்பலூர் டோல்கேட்

அப்போது பணம் செலுத்துவது தொடர்பாக காரில் வந்தவர்களுக்கும் டோல்கேட் ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது காரிலிருந்த ஒருவர் இறங்கி கையில் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி 2 முறை சுட்டார். அதைப்பார்த்து டோல்கேட் ஊழியர்கள் சிதறி ஓடினார்கள். அதன் பின் கும்பலாகச் சேர்ந்த ஊழியர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ரவுடியைப் பிடித்தார்கள். அதற்குள் மற்றவர்கள் காரில் ஏறி தப்பினர்.

ரவுடிகளின் கார்
ரவுடிகளின் கார்

காவல்துறையினர் வந்து விசாரித்ததில் துப்பாக்கியால் சுட்டவர் திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பது தெரிந்தது. காரில் ரவுடி எண்ணூர் தனசேகரனும் இன்னும் சில ரவுடிகளும் இருந்தாக போலீஸாரிடம் அவர் கூறியிருக்கிறார்.

தப்பி ஓடியவர்களைப் பிடிக்க காவல்துறையினர் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தார்கள். இந்த நிலையில் உசிலம்பட்டியில் தாங்கள் வந்த காரிலிருந்து மாறி ஆட்டோவில் தப்பமுயன்ற ரவுடி எண்ணூர் தனசேகரனையும் மூன்று ரவுடிகளையும் போலீஸார் கைது செய்தனர்.

கப்பலூர் டோல்கேட்
கப்பலூர் டோல்கேட்

இந்தச் சம்பவத்தால் மதுரை கப்பலூர் டோல்கேட் பரபரப்படைந்தது. இவர்கள் நெல்லை நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராக வந்ததாகச் சொல்லப்பட்டாலும் வேறு அசைன்மென்டுக்காக வந்தார்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.