Published:Updated:

`நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!’ - 8 இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த தஞ்சை இளைஞர்

இளம் பெண்களிடம் நன்றாகப் பழகக்கூடியவர். `நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’ எனச் சொல்லிவிட்டுதான் பெண்களிடம் பேசத் தொடங்குவார்.

சந்தோஷ்
சந்தோஷ்

ஒரத்தநாடு அருகே, காதலிப்பதாகக் கூறி 8 இளம் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு ஏமாற்றி அவர்களிடமிருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றைப் பறித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இதை அறிந்த 4 பெண்களின் பெற்றோர்கள் காவல் நிலையதுக்கு வந்து கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளம் பெண்களிடம் நன்றாகப் பழகக்கூடியவர். `நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’ எனச் சொல்லிவிட்டுதான் பெண்களிடம் பேசத் தொடங்குவார் சந்தோஷ்.
போலீஸார்

ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூரைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு வயது 25. திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். ஒரத்தநாடு அருகே கருவிழிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய சத்யா என்ற பெண்ணை சந்தோஷ் காதலித்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர், காதல் மனைவியை அழைத்துக்கொண்டு திருப்பூருக்குச் சென்றார். பனியன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு அங்கே தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, வேலைக்குச் சென்ற சந்தோஷ் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா, சந்தோஷை பல இடங்களில் தேடியுள்ளார். சந்தோஷின் நண்பர்கள் வட்டாரத்திலும் விசாரித்துள்ளார். ஆனால், சந்தோஷ் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து திருப்பூர் போலீஸில், மாயமான தன் கணவரைக் கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார். போலீஸாரும் வழக்கு பதிவு செய்து சந்தோஷைத் தேடி வந்தனர்.

அள்ளிக்கொடுத்த புதுமாப்பிள்ளை; அதிர்ச்சியில்  மணமகள் - திருமணம் முடிந்த 3 வது நாளில் சிறையில் கணவன்!

இதற்கிடையே, சந்தோஷ், திருப்பூரைச் சேர்ந்த 19 வயதுடைய சசிகலா என்ற இளம் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. சசிகலாவுடன் சொந்த ஊரான ஒக்கநாடு கீழையூருக்குச் சென்று குடும்பம் நடத்தி வருவது குறித்தும் உறவினர்கள் மூலம் சத்யாவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சத்யா, `காதலை நம்பி மோசம் போய், என் வாழ்கையைத் தொலைத்து விட்டேனே’ எனக் கண்ணீர் விட்டிருக்கிறார்.

அதன் பிறகு ஊருக்கு வந்த சத்யா, வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டது குறித்து சந்தோஷிடம் கேட்டிருக்கிறார். இதற்கு சந்தோஷ் முறையாகப் பதில் சொல்லாமல் கோபமாகப் பேசி திருப்பி அனுப்பியுள்ளார். இதையடுத்து சத்யா ஒரத்தநாடு போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் ஒக்கநாடு கீழையூருக்குச் சென்று, சந்தோஷ் மற்றும் சசிகலா இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இந்த விசாரணையில் அவை உண்மையென தெரிய வருகிறது. அதன் பின்னர் சத்யாவை ஏமாற்றி சசிகலாவைத் திருமணம் செய்த சந்தோஷை போலீஸார் கைது செய்து, பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸில் ஒப்படைந்தனர். அதன் பின்னர், அவர்கள் தொடர்ந்து நடந்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சந்தோஷ்
சந்தோஷ்

இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ``சந்தோஷ் எப்பவுமே துடுக்காக இருப்பார். இளம் பெண்களிடம் நன்றாகப் பழகக்கூடியவர். `நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’ எனச் சொல்லிவிட்டுதான் பெண்களிடம் பேசத் தொடங்குவார். அவர்கள் கவலையாக இருப்பதுபோல் தெரிந்தால் ஆறுதலாகப் பேசி வலையில் விழ வைத்து, காதலிப்பதுபோல் நடித்து திருமணம் செய்துகொள்வார். காதல் மனைவிகளிடம் சில மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு அவர்களிடம் இருக்கும் நகை, பணம் ஆகியவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக் கொள்வார்.

அதன் பின்னர், அந்தப் பெண்ணிடம் எதுவும் இல்லை என்று தெரிந்த பிறகு தவிக்கவிட்டுச் சென்று விடுவார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதேபோல் 8 இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை பறித்துக் கொண்டது அம்பலமாகியுள்ளது.

`சட்டப்படி அந்தத் திருமணம் செல்லாது!'- கறார் காட்டும் மனைவி; 2 குழந்தைகளோடு போராடும் முதல் கணவர்

இந்தத் தகவலை அறிந்த 4 பெண்களின் பெற்றோர்கள் வந்து, `எங்க பொண்ணு வாழ்கையை இப்படி நாசம் செய்துவிட்டாயே?’ என போலீஸ் ஸ்டேஷனிலேயே கதறி அழுது தங்கள் பெண்களின் எதிகால நிலையை எண்ணி பரிதபமாக நின்றது சோகத்தை ஏற்படுத்தியது. அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.