Published:Updated:

கோவை மாணவி பாலியல் வழக்கு: தலைமறைவான பள்ளி முதல்வர் மீரா மீது போக்சோ... போலீஸ் வலைவீச்சு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன்
பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன்

மாணவி தற்கொலை விவகாரத்தில், பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன்மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை சின்மயா வித்யாலயா பள்ளி மாணவி தற்கொலைச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைதுசெய்யப்பட்டார். பள்ளி நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் வலுத்துவருகிறது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்திரிப்புப் படம்
கோவை: பள்ளியைவிட்டு விலகியும் டார்ச்சர்; மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த  ஆசிரியர் கைது!

போராட்டம் நடத்திவரும் உறவினர்கள், நண்பர்கள், அமைப்பினரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில், கோவை மாநகர துணை ஆணையர் ஜெயச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ``ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை நேற்றே கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டோம். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறோம். அந்த வகையில், குற்றவாளிமீது உரிய நடவடிக்கை எடுக்காததால், பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன்மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மீரா ஜாக்சன் தலைமறைவாகியிருக்கிறார். இரண்டு குழுக்கள் அமைத்து அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து இந்த வகையில், சரியான விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி எழுதிவைத்த கடிதம் குறித்து ஆராய்ந்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றார்.

போராட்டம்
போராட்டம்

முதல்வர் மீரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு