Published:Updated:

பனையூர் சொகுசு விடுதியில் விடிய விடிய மது விருந்து! - 500 பேரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்

போலீஸ்

கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர் அருகிலுள்ள சொகுசு விடுதியில் நேற்றிரவு நடந்த மது விருந்தின்போது, போலீஸார் நடத்திய சோதனையில் பெண்கள் உட்பட 500 பேர் சிக்கினர்.

பனையூர் சொகுசு விடுதியில் விடிய விடிய மது விருந்து! - 500 பேரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்

கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர் அருகிலுள்ள சொகுசு விடுதியில் நேற்றிரவு நடந்த மது விருந்தின்போது, போலீஸார் நடத்திய சோதனையில் பெண்கள் உட்பட 500 பேர் சிக்கினர்.

Published:Updated:
போலீஸ்

இந்தியாவின் பெருநகர ஹோட்டல்கள், சொகுசு விடுதிகளில் பண்டிகை தினங்கள், வார இறுதி நாள்கள் என மது விருந்து நடைபெறுவது ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருகிறது. பல இடங்களில் முறையான அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக பார்ட்டிகளும் நடைபெறுகின்றன. இந்த நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர் அருகேயுள்ள சொகுசு விடுதியில் நேற்றிரவு நடந்த மதுவிருந்தில் கலந்துகொண்டவர்கள் போலீஸின் எச்சரிக்கைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

போலீஸ்
போலீஸ்
மாதிரி புகைப்படம்

பனையூர் அருகேயுள்ள சொகுசு விடுதியில் முறைகேடாக மது விருந்து நடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததன் பேரில், நேற்று நள்ளிரவு போலீஸார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று சோதனை நடத்தியுள்ளனர். பின்னர், மது விருந்தில் போதையில் தள்ளாடிக்கொண்டிருந்த பெண்கள், கல்லூரி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் சுற்றிவளைத்தனர். மேலும் அங்கிருந்த கார், பைக் போன்றவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தகவலறிந்ததும் தாம்பரம் போலீஸ் கமி‌ஷனர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீஸ், மது விருந்தில் கலந்துகொண்டவர்களின் விவரங்களைக் கேட்டு, அதைப் பதிவுசெய்து அவர்களை எச்சரித்து அனுப்பியது. மேலும், முறைகேடாக மது விருந்து நடத்திய குற்றத்துக்காக விடுதி மேலாளர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். மேலும் சொகுசு விடுதி மீதும் நடவடிக்கை எடுக்கவும் போலீஸார் ஆலோசித்துவருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism